நேபாளத்தின் இடைக்கால பிரதமராகும் சுஷிலா கார்கி.. பிரதமர் மோடி மற்றும் இந்தியா குறித்து பேசியது என்ன?

Sushila Karki: நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தேர்வாகியுள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேடியளித்த போது, “ நான் பிரதமர் மோடியை வாழ்த்துகிறேன். பிரதமர் மோடி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் இடைக்கால பிரதமராகும் சுஷிலா கார்கி.. பிரதமர் மோடி மற்றும் இந்தியா குறித்து பேசியது என்ன?

சுஷிலா கார்கி

Published: 

11 Sep 2025 11:14 AM

 IST

நேபாளம், செப்டம்பர் 11, 2025: நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு மெய்நிகர் கூட்டத்தில் 5,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்ததை அடுத்து, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி ஜென் zயின் முன்னணி தேர்வாக உருவெடுத்துள்ளார். நேபாளத்தில் கே.பி. ஷர்மா ஒலி ஆட்சி நடைபெற்ற நிலையில், வரம்புகளுக்குள் பொருந்தாததால் சில சமூக வலைதள ஊடகங்களை அந்த நாட்டு அரசு தடை செய்தது. அதாவது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் Facebook, Instagram, WhatsApp, YouTube உள்ளிட்ட 26 சமூக ஊடக செயலிகள் முடக்கம் செய்யப்பட்டன.

நேபாளத்தில் என்ன நடக்கிறது?

நேபாள அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஜென் z தலைமுறையினர் மத்தியில் இந்த விவகாரம் விஸ்வரூபமாக மாறியது. இதன் காரணமாக TikTok உள்ளிட்ட செயலிகள் மூலம் ஆயிரக்கணக்கான ஜென் z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்து கையை மீறிய நிலையில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்தது.

இதனைத் தொடர்ந்து அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, உடனடியாக சமூக வலைதளத்தின் மீதான தடையை அந்த நாட்டு அரசு திரும்பப்பெற்றது. பித்தகைய சூழலில் அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கிமுதன்மை தேர்வாக ஜென் z இளைஞர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இந்தியாவுடன் இருக்கும் நீண்டகால உறவுகளை பிரதிபலித்துள்ளார்.

Also Read: நேபாளத்தை பந்தாடிய இளைஞர்கள்.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கேபி சர்மா ஒலி!

யார் இந்த சுஷிலா கார்கி?

தன்னை “இந்தியாவின் தோழி” என்று வர்ணித்துக் கொண்ட சுஷிலா கார்கி, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1975 ஆம் ஆண்டு அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்டுகள் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். மேலும், “இந்தியத் தலைவர்களைப் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்… இந்திய நண்பர்கள் என்னை ஒரு சகோதரியாக நடத்துகிறார்கள்” என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

நியூஸ் 18 தொலைக்காட்சி உடன் பேசிய 71 வயதான சட்ட நிபுணர், 1970களில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) படித்த காலத்தை நினைவு கூர்ந்தார். நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சுஷிலா கார்கி ஜூலை 2016 முதல் ஜூன் 2017 வரை பணியாற்றி வரலாறு படைத்தார். ஜனவரி 2009 இல் உச்ச நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2010 இல் நிரந்தர நீதிபதியானார்.

Also Read: இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்.. ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்..

நேபாளத்தின் நலன் விரும்பிகள் இந்தியர்கள்:

தொடர்ந்து பேசிய அவர், “நான் BHU-வில் படித்தேன்… எனக்கு இந்தியாவில் பல நண்பர்கள் உள்ளனர். BHU-வில் உள்ள எனது ஆசிரியர்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக உள்ளது, அது பல ஆண்டுகள் பழமையானது. இந்தியா நேபாளத்திற்கு நிறைய உதவி செய்துள்ளது. இந்தியர்கள் எப்போதும் நேபாளத்திற்கு நலம் விரும்புவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய சுஷிலா கார்க்கி:

மேலும், “நான் பிரதமர் மோடியை வாழ்த்துகிறேன். பிரதமர் மோடி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. நாங்கள் இன்று இந்தியாவுடன் தொடர்பு இல்லை; அதை பற்றி பேசுவோம். இது இரண்டு நாடுகளுக்கிடையேயான சர்வதேச விஷயமாக இருக்கும் போது, சிலர் ஒன்றாக அமர்ந்து கொள்கையை உருவாக்கி பேசுவோம். ஆனால் நேபாள மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையே நல்ல உறவு எப்போதும் இருந்து வருகிறது.” என பேசியுள்ளார்.