இனி கிரீன் கார்டு பெற அமெரிக்கரை திருமணம் செய்தால் மட்டும் போதாது.. டிரம்ப் நிர்வாகத்தின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்!

America Green Card Strict Rules | அமெரிக்காவின் குடிமக்கள் அங்கீகாரமான கிரீன் கார்டு பெற அமெரிக்க ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்வது மிகவும் சுலபமானதாக இருந்தது. ஆனால், அது இனி அப்படி இருக்காது என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இனி கிரீன் கார்டு பெற அமெரிக்கரை திருமணம் செய்தால் மட்டும் போதாது.. டிரம்ப் நிர்வாகத்தின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Jan 2026 11:02 AM

 IST

வாஷிங்டன், ஜனவரி 03 : இந்தியா (India) உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு (America) ஏராளமான பொதுமக்கள் வேலைக்காக செல்கின்றனர். அவ்வாறு வேலைக்கு செல்லும் சிலர், அமெரிக்காவின் குடிமக்கள் அங்கீகாரமான கிரீன் கார்டு (Green Card) பெற விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு கிரீன் கார்டு வாங்கும் நபருக்கு அமெரிக்காகில் நிரந்தரமாக வழவும், வேலை செய்யவும் சட்டபூர்வமாக உரிமை வழங்கப்படும். அதற்கு ஆசைப்பட்டு ஏராளமான உலக நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு சென்று கிரீன் கார்டு பெற முயற்சி செய்கின்றனர். இந்த நிலையில் தான் கிரீன் கார்டு பெறுவதில் டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாட்டை விதித்த டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவின் கிரீன் கார்டு பெற வெளிநாட்டவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு மிக எளிதாக இருக்கும். அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கான் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு கிரீன் கார்டு பெற திருமணம் செய்வது ஒரு எளிய வழியாக இருந்து வந்த நிலையில், அதனை பயன்படுத்தி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் தான், டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : உலகில் முதலில் புத்தாண்டு கொண்டாடும் நாடும் எது? இந்தியாவுக்கு எந்த இடம்?

இனி இது மட்டுமே தகுதியாக கருதப்படாது

அமெரிக்கரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு கிரீன் கார்டு சுலபமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அதனை மட்டுமே தகுதியாக வைத்து கிரீன் கார்டு வழங்கப்படாது என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே திருமணம் நடந்ததா அல்லது அவர்கள் உண்மையிலேயே திருமணம் செய்துக்கொண்டார்களா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : முற்றிய மோதல்.. வெனிசுலாவின் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்.. டிரம்ப் பரபரப்பு தகவல்!

கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால் அவர்களின் கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கு சிக்கல் ஏற்படும். ஒன்றாக வாழ்வது தான் உங்களுக்கு கிரீன் கார்டை பெற்றுத் தரும். பலரும் வேலை, படிப்பு, வசதி உள்ளிட்டவற்றுக்காக வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ளப்படாது என் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி