இந்தோனேசியாவின் கசோங்கன் மார்கெட்டில் பெரும் தீ விபத்து.. முழுவதும் எரிந்து சேதமானது!
Kasongan Market Fire Accident In Indonesia | இந்தோனேசியாவில் உள்ள கசோங்கன் மார்க்கெட்டில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் அனைத்தும் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கொழுந்துவிட்டு எரியும் தீ
கடிங்கன், ஜனவரி 26 : இந்தோனேசியாவின் (Indonesia) கலிமந்தன் (Kalimantan) பகுதியில் உள்ள கசோங்கன் மார்கெட்டில் (Kasongan Market) இன்று (ஜனவரி 26, 2026) கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மார்க்கெட் வீதியில் இருந்த கடைகள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. அந்த பகுதியில் மாலை 6 மணிக்கு முதல் முதலாக பொதுமக்கள் தீ பரவுவதை கண்டுபிடித்துள்ளனர். லேசாக தீ பரவிய நிலையில், அந்த பகுதியில் மரத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் அதிக அளவில் இருந்த நிலையில் தீ மலமலவென பரவி அந்த பகுதி முழுவதையும் தீக்கிரையாக்கியுள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் தீயணைப்பு துறையினர்
தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கசோங்கன், கிரேங் பங்கி, பலங்கரயா ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் பொழுது விடிவதற்குள் தீ அந்த பகுதியில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூரையாடியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ளது.
இதையும் படிங்க : ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி.. இரண்டு நாள் நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை
முழுவதும் எரிந்து தீக்கிரையான கசோங்கன் மார்க்கெட்
A major fire has torched the Kasongan Market complex in Katingan, Central Kalimantan, Indonesia, destroying shops and nearby homes; casualties remain unknown.
— AZ Intel (@AZ_Intel_) January 26, 2026
தீ விபத்து ஏற்பட்டுள்ள கசோங்கன் மார்க்கெட்டில் கடும் காற்று வீசிக்கொண்டு இருக்கும் நிலையில், தீ அருகில் உள்ள பகுதிகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் விடாமல் தீயணை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அங்கு தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுவதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.