ஈரானில் இருக்கும் இந்தியர்கள் விரைவாக வெளியேறுங்கள்.. இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
Indian Embassy's Announcement For Indian's Iran | ஈரான் மீது நேற்று (ஏப்ரல் 07, 2026) மிக பயங்கர தாக்குதல் நடத்த உள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தானின் தலையிடலால் ஈரான் மீது தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி, ஏப்ரல் 08 : ஈரான் (Iran) மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்தப்போவதில்லை என அமெரிக்கா (America) அறிவித்துள்ள நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது ஈரானில் இருக்கும் இந்தியர்களை விரைவாக வெளியேறும்படி கூறியுள்ளது. இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு வாரங்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்கா
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடி வைத்திருந்த நிலையில், அதனை திறக்க வேண்டும் என பலமுறை அமெரிக்கா எச்சரித்து வந்தது. ஆனால், ஈரான் அதற்கு செவிசாய்க்காத நிலையில், 48 மணி நேரம் கடைசி கெடு விதித்த அமெரிக்கா நேற்று (ஏப்ரல் 07, 2026) இரவு ஈரானை மிக கடுமையாக தாக்க உள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் தலையிட்டு ஈரான், ஹோர்முஸ் நீரிணையை திறக்க இரண்டு வாரங்கள் அவகாசம் கோரியது.
இதையும் படிங்க : ஈரான் மீதான தாக்குதல் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கேட்டுக்கொண்டதன் படி, ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என டிரம்ப் கூறினார். டிரம்ப், ஏப்ரல் 07, 2026 அன்று ஈரான் மீது பயங்கர தாக்குதல் நடத்த உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அன்றைய தினம் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கான முக்கிய அறிவுரையை இந்திய தூதரகம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்றும் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : அதிகரிக்கும் போர் பதற்றம்..ஈரானில் இருக்கும் இந்தியர்கள் 48 மணி நேரம் வெளியே செல்ல வேண்டாம் என இந்தியா வலியுறுத்தல்
இந்திய தூதரகத்தின் எக்ஸ் பதிவு
⚠️ Advisory as on 08 April 2026. pic.twitter.com/pusFQIAKKI
— India in Iran (@India_in_Iran) April 8, 2026
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள இந்திய தூதரகம், ஏப்ரல் 07, 2026 அன்று கூறப்பட்ட அறிவுரையை தொடர்ந்து ஈரானில் இருக்கும் இந்தியர்கள் விரைவாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என கூறியுள்ளது. இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ள வழிகளில் இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் வெளியேற கூறியுள்ளது. தூதரகத்திடம் அறிவுரை மற்றும் ஒத்துழைப்பை பெறாமல் இந்தியர்கள் எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் செல்ல கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏதேனும் அவசர தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்ப்புக்கொள்ள சில எண்களையும் அறிவித்துள்ளது.
இந்திய தூதரகத்தை தொடர்ப்புக்கொள்ள
- 989128109115
- 989128109102
- 989128109109
- 989932179359