America : பெண்கள் இந்தியாவுக்கு தனியாக செல்ல வேண்டாம்.. குடிமக்களுக்கு அறிவுரை வழங்கிய அமெரிக்கா!

America Declared Travelling Warning for Citizens | வேலை, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு, இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களுக்கும் அந்த நாடு அரசு சில பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

America : பெண்கள் இந்தியாவுக்கு தனியாக செல்ல வேண்டாம்.. குடிமக்களுக்கு அறிவுரை வழங்கிய அமெரிக்கா!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Jun 2025 12:33 PM

அமெரிக்கா, ஜூன் 23 : அமெரிக்கர்கள் (Americans) சிலர் இந்தியாவில் வசித்து வரும் நிலையில், இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கவும், பெண்கள் இந்தியாவுக்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்கா தங்களது குடிமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்களை பாதுகாப்பாக இருக்க கூறிய அமெரிக்கா

கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக பொதுமக்கள் இந்தியாவை விட்டு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். இதேபோல வெளிநாடுகளில் இருந்தும் இந்த காரணங்களுக்காக பொதுமக்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பொதுமக்கள் பலர் வேலை காரணமாக இந்தியாவில் தங்கியுள்ளனர். மேலும் பலர் சுற்றுலாவுக்காக வருகை தருகின்றனர். இதன் காரணமாக அமெரிக்கர்கள் அதிகம் பயணிக்கு சுற்றுலா தளமாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் தான், அமெரிக்கா தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு பெண்கள் தனியாக பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா

இது குறித்து கூறியுள்ள அமெரிக்கா, இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க கூறியுள்ளது. மேலும், அமெரிக்க பெண்களை இந்தியாவுக்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இந்தியாவில் குறிப்பாக ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் எனவே அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.

இந்த இடங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கொண்டுள்ளதால் இந்திய அரசு, சுற்றுலா பயணிகளை அங்கு செல்ல அனுமதிக்காது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.