Pakistani Supports India: பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான்.. இந்தியாவிற்கு ஆதரவாக ஒலித்த பாகிஸ்தானியரின் குரல்!
India Pakistan Conflict: 2025 ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மே 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. பின்னர் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது. ஒரு பாகிஸ்தானிய வியாபாரி இந்தியாவின் செயலை ஆதரித்து, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை கண்டித்தார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டன, ஆனால் சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டன.

கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரை அடுத்த பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய (Pahalgam Terrorist Attack) துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க சரியான நேரத்திற்கு காத்திருந்த இந்தியா, கடந்த 2025 மே 7ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் (Operation Sindoor) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதில் 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிந்ததாக இந்திய இராணுவம் தெளிவுபடுத்திருந்தது. இதனை தொடர்ந்து, அடுத்த நாள் அதாவது 2025 மே 8ம் தேதி இரவு 8 மண் முதல் பாகிஸ்தான் இராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. பாகிஸ்தான் இராணுவத்தின் அத்தனை முயற்சிகளையும் இந்திய இராணுவம் அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பலரும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். இந்தநிலையில், சமூகவலைதளங்களில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானியர் இந்தியாவிற்கு ஆதரவு:
View this post on Instagram
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அந்திய செலாவணி வர்த்தகரான அபய், இந்திய இராணுவத்தை புகழ்ந்தும், தனது பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை வளர்ப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வீடியோ வாயிலாக கூறியதாவது, “நான் ஒரு பாகிஸ்தானியன். இதை நான் நேரடியாக சொல்ல எந்த தயக்கமும் இல்லை. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. முதலில் நீங்கள் (பாகிஸ்தான்) இந்தியா நாட்டை சேர்ந்த மக்கள் மீது தாக்குதலை நடத்தினீர்கள். அதற்கு அவர்கள் பதிலடி கொடுக்கும்போது, திடீரென்று அமைதி, மனித உரிமைகள் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், 26 அப்பாவி உயிர்கள் இழந்தபோது, அதே அமைதியும், மனித உரிமையும் எங்கே போனது. ?
யாரும் போரை விரும்புவதில்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி. ஆனால், நீங்கள் பயங்கரவாதத்தை வளர்க்க தொடங்கும்போது,. அது உங்கள் பக்கம் திரும்பும்போது ஆச்சரியப்பட வேண்டாம். இந்தியா இதை ஒருபோதும் தொடங்கவில்லை. அவர்கள் பதிலடி மட்டுமே கொடுத்தார்கள். எனக்கு, அது ஒரு போர் நடவடிக்கையாக தெரியவில்லை, நீதியாக தெரிந்தது. ஒரு பாகிஸ்தானிய இந்துவாக இதுதான் எனது கருத்து. ஜெய் ஹிந்த்” என தெரிவித்திருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர்:
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பாகிஸ்தான் இராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் குறுக்கே, அதிலும் குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது. மேலும், . பாலகோட், மெந்தர், கிருஷ்ணா காட்டி மற்றும் மான்கோட் போன்ற பகுதிகளில் ஷெல் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் உயிரிழந்தனர். 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
3 நாட்கள் கடுமையான சண்டைக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூட்டை நிறுத்த ஒப்புக்கொண்டன. இது குறுகிய நேரமே நீடித்தது. ஸ்ரீநகர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் புதிய ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் சில மணி நேரங்களுக்குள் அதை மீறியதாகக் கூறப்படுகிறது. பின்பு, பாகிஸ்தான் இராணுவம் தானாகவே பின் வாங்கியது.