காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர்.. ஏரியில் விழுந்து விபத்து!

Helicopter Fell Into Lake | பிரான்சில் உள்ள ரோஸ்பெர்டன் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்க தீயணைப்பு துறை போராடி வருகிறது. இந்த நிலையில் தீயை அணைப்பதற்காக ஏரியில் தண்ணீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர் தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானது.

காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர்.. ஏரியில் விழுந்து விபத்து!

வைரல் வீடியோ

Published: 

27 Aug 2025 15:34 PM

பாரிஸ், ஆகஸ்ட் 27 : பிரான்சில் (France) காட்டுத்தீயை அணைக்க ஏரிக்கு தண்ணீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர் தண்ணீருக்குள் விழுந்து விபத்துள்ளான (Helicopter Fell Into Lake) சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது மிக வேகமாக  வைரலாகி வருகிறது.

ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

பிரான்சின் பிரிட்டனி மாகாணத்தில் உள்ள ரோஸ்பெர்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ வேகமாக பரவி வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கான அருகில் உள்ள ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 26, 2025) மொரினா என்ற 29 ரக  ஹெலிகாப்டர் தண்ணீரை சேகரிக்க முயன்றுள்ளது.

இதையும் படிங்க : மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண் மருத்துவர்களை வீடியோ எடுத்த மருத்துவர்!

வட்டமடித்து ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

இதையும் படிங்க : சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்.. 5 பேர் பலி!

தண்ணீரில் உரசியதால் விபத்து – வெளியான காரணம்

விமானம் தண்ணீரை சேகரிக்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், வட்டமடிக்க தொடங்கிய நிலையில், ஏரிக்குள் விழுந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். விமானம் தண்ணீரை சேகரிக்க முயன்றபோது, ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் ஏரி தண்ணீர் உரசியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.