எகிப்தில் 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் திறப்பு.. அப்படி என்ன சிறப்புகள் உள்ளன?

Grand Egyptian Museum Opens | எகிப்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த தி கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம் நேற்று (நவம்பர் 01, 2025) திறக்கப்பட்டுள்ளது. இது எகிப்தின் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கல்லாகவும், வரலாற்றை பாதுகாக்கும் மாபெரும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.

எகிப்தில் 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் திறப்பு.. அப்படி என்ன சிறப்புகள் உள்ளன?

தி கிராண்ட் எகிப்தியன் மியூசியம்

Published: 

02 Nov 2025 09:00 AM

 IST

கெய்ரோ, நவம்பர் 02 : எகிப்தில் (Egypt) சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த தி கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம் (The Grand Egyptian Museum) நேற்று (நவம்பர் 01, 2025) திறக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்கதாக உள்ள இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவுக்கு மன்னர்கள், மந்திரிகள் மற்றும் பல்வேறு உலக தலைவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில், இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எகிப்தில் திறக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட அருங்காட்சியகம்

எகிப்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த அருங்காட்சியகம் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த அருங்காட்சியகம் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், அது மனித கலாச்சாரம் மற்றும் நாகரிக வரலாற்றில் ஒரு விதிவிலக்கு என்று எகிப்து அதிபதி மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வீட்டை சுத்தம் செய்யாததால் வந்த சண்டை.. கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!

ஒற்றை நாகரிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியம் ஒற்றை நாகரிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பண்டைய எகிப்து மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட கலை பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் 3 பிரமிடுகள் இருக்கும் கிசா பீட பூமியில் அமைக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த அருங்காட்சியகம்

இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகள் 2005 ஆம் ஆண்டு தொடங்கியது. சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட  இந்த திட்டம் அரசியல் காரணங்களால் கைவிடப்பட்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டு எகிப்தின் ஜனாதிபதியாக பதவி ஏற்ற அப்தெல்-பத்தா எல்-சிசி இந்த திட்டத்தை முன்னெடுத்து நடத்தினார்.

இதையும் படிங்க : துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்.. நள்ளிரவில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 24,000 சதுர மீட்டர் நிரந்தர கண்காட்சி இடம் உள்ளது. இதில், மன்னர் துட்டன்காமூனின் சேகரிப்பில் இருந்து எடுக்கப்பட்ட 5,000 கலை பொருட்களுக்காக 2 அரங்குகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தை பிரமிடுகளுடன் இணைக்கும் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதன் மூலம் சென்று பிரமிடுகளை பார்வையிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.