Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’நன்றி மறந்தவர்.. நான் இல்லனா வெற்றி பெற முடியுமா?’ டிரம்ப்பை காட்டமாக விமர்சித்த மஸ்க்!

Donald Trump - Elon Musk : அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்கிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டிரம்பை எலான் மஸ்க் காட்டமாக விமர்சித்துள்ளார். டிரம்ப் நன்றி மறந்தவர் என்றும் நான் இல்லையெனில் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க கூட முடியாது என்றும் நேரடியாக எலான் மஸ்க் விமர்சித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

’நன்றி மறந்தவர்.. நான் இல்லனா வெற்றி பெற முடியுமா?’ டிரம்ப்பை காட்டமாக விமர்சித்த மஸ்க்!
எலான் மஸ்க் - டொனால்டு டிரம்ப்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Jun 2025 07:45 AM

 அமெரிக்கா, ஜூன் 06 : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் (donald trump vs elon musk), எலான் மஸ்கிற்கும் மோதல் வெடித்துள்ளது. இருவரும் ஒருவரைக்கொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். தான் இல்லையென்றால் டிரம்பால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் நன்றி மறந்தவர் டிரம்ப் என்றும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட உலக பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க்கை, அதிபரான பிறகு டிரம்ப் Doge துறையில் தலைமை ஆலோசகராக நியமித்தார். இவரது ஆலோசனையில் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்தார்.

டிரம்ப் – எலான் மஸ்க் இடையே முற்றிய மோதல்

இதற்கிடையில், கடந்த வாரம் அப்பகுதியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தது பரபரப்பை கிளப்பியது. இதற்கு காரணம் டிரம்ப் தாக்கல் செய்த புதிய வரி மசோதா. அண்மையில் இருந்தே டிரம்ப் கொண்டு வந்த வரி மற்றும் செலவின மசோதாவை கடுமையாக விமர்சித்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அரசுக்கு செலவினங்கள் அதிகம் ஏற்படும் எனவும் எலான் மஸ்க் கூறி வநதார். மேலும், இந்த மசோதாக அறுவறுப்பானது என்றும் எலான் மஸ்க் கூறினார். இதற்கு டிரம்பும் பதிலடி கொடுத்தார். அதாவது ” எலான் மஸ்கினா நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.

நான் எலானுக்கு நிறைய உதவி செய்துள்ளேன். அவர் என்னைப் பற்றி மிக அழகான விஷயங்களைச் சொன்னார். ஆனால் தற்போது மோசமாக பேசுகிறார். அவர் DOGE இல் கடுமையாக உழைத்தார். அந்த இடத்தை அவர் இழக்கிறார்” என்று டிரம்ப் கூறினார். இருப்பினும், டிரம்ப் தாக்கல் செய்த வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. டிரம்பின் கருத்துக்கு எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.

”நன்றி மறந்தவர் டிரம்ப்”


எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பார். குடியரசுக் கட்சியினர் செனட்டில் 51-49 என்ற விகிதத்தில் இருந்திருப்பார்கள். டிரம்ப் நன்றி மறந்தவர்” என குறிப்பிடிருந்தார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், ”மஸ்க்கின் உதவி இல்லாமலேயே பென்சில்வேனியாவை வென்றிருப்பேன். நான் மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றிருப்பேன்” என கூறினார். இது அபத்தமானது என்று எலான் மஸ்க் பகிரங்கமாக கூறினார்.

இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?
இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?...
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்..
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்.....
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்...
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!...
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...