Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘டிரம்ப் பதவி விலகனும்.. இவர் தான் அடுத்த அதிபர்’ புயலை கிளப்பிய எலான் மஸ்க்.. என்ன நடக்கிறது?

Donald Trump vs Elon Musk : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும் அமெரிக்க அதிபராக ஜே.டி. வானஸ் பதவியேற்க வேண்டும் எனவும் உலக பணக்காரரான எலான் மஸ்க் கூறியதை பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்படி, இருவருக்குமான மோதல் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது.

‘டிரம்ப் பதவி விலகனும்.. இவர் தான் அடுத்த அதிபர்’ புயலை கிளப்பிய  எலான் மஸ்க்.. என்ன நடக்கிறது?
எலான் மஸ்க் - டொனால்டு டிரம்ப்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Jun 2025 10:54 AM IST

அமெரிக்கா, ஜூன் 06 :  அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் (donald trump) மற்றும் உலக பணக்காரரான எலான் மஸ்க் (elon musk) இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.  அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும் அடுத்த அதிபராக ஜே.டி.வானஸ் பதவியேற்க வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மஸ்க் கூறினார். அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பின் முக்கிய ஆலோசகராக இருந்தவர் எலான் மஸ்க். இவர் நிதியுதவி முதல் பல்வேறு விஷயங்களுக்கு டிரம்பிற்கு ஆதரவாக இருந்தார். குறிப்பாக, அமெரிக்க அரசின் செலவை குறைக்கவும், மேம்படுத்தவும் தொடர் எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்து வந்தார். Doge துறையில் தலைமை ஆலோசகராக இருந்தார்.

எலான் மஸ்க் – டிரம்ப் மோதல்

இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்தார். அப்போது முதலே, டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல் இருந்தது. தற்போது இந்த மோதல் இருவருக்கு இடையே இருந்த நட்பை உடைத்தது.

அந்த அளவுக்கு பிரச்சை விஸ்வரூம் எடுத்தது. இதற்கு முக்கிய காரணமாக டிரம்ப் கொண்டு வந்த நிதி மசோதா. இந்த மசேதாவால் செலவினங்கள் அதிகம் ஏற்படும் என மஸ்க் கூறினார். ஆனால், இதனை மறுத்து டிரம்ப் இந்த மசோதாவை தாக்குதல் செய்து நிறைவேற்றினார். இதனால், எலாம் மஸ்க் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில்  தற்போது அந்த பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் பதவி விலக வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில்  எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அதாவது, ”மிகப் பெரிய குண்டை வீச வேண்டிய நேரம் இது.

‘டிரம்ப் பதவி விலகனும்’


டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அந்த கோப்புகளின் விவரங்கள் வெளியே வராததற்கு அதுதான் உண்மையான காரணம். இந்த பதிவை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உண்மை வெளியே வரும். டிரம்ப் பதவி விலக வேண்டும். அமெரிக்க அதிபராக ஜே.டி.வான்ஸ் பொறுப்பேற்க வேண்டும்” என குறிப்பிட்டார். இவரது பதவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

இதனை அடுத்து, ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்ஸ் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் நிதியாளர். இவர் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். இவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், ஆள் கடத்தல் போன்றவை எழுந்தது. இதனை அடுத்து, அவர் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

2019ஆம் ஆண்டு சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீனின் வழக்கு கோப்புகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பெயர்கள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இது நீண்ட காலமாக நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோப்புகளில் உள்ள விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. இது அமெரிக்கா அரசியலில் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனை தான், தற்போது மஸ்க் கூறி வருகிறார். இந்த எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்ப் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.