வங்காளதேசத்தில் மேலும் பதற்றம்.. மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!
Another Student Leader Shot In Head In Bangladesh | வங்காளதேசத்தில் 2024-ல் ஒரு மாணவர் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பதற்றமே இன்னும் குறையாத நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் தலைவர் சுடப்பட்டுள்ளார்.

தலையில் சுடப்பட்ட மாணவர் தலைவர்
டாக்கா, டிசம்பர் 23 : வங்காளதேசத்தில் (Bangladesh) 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் புரட்சியில், மாணவர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஷெரீப் உஸ்மான் என்ற 32 வயது நபர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் வங்காளதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அது மறைவதற்குள்ளாகவே மேலும் ஒரு மாணவர் நேற்று (டிசம்பர் 22, 2025) சுடப்பட்டுள்ளார். இது வங்காளதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
வங்காளதேசத்தில் சுடப்பட்ட மேலும் ஒரு மாணவர் – நீடிக்கும் பதற்றம்
வங்காளதேசத்தின் தேசிய குடிமக்கள் கட்சி என்ற கட்சியின் குல்னா பிரிவு தலைவர் மொதாலேப் ஷிக்தர். இவர் நேற்று (டிசம்பர் 22, 2025) தென்மேற்கு குல்னா நகரில் மர்ம நபர்களால் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதன் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர், குல்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு காரணமாக அவரது தலையில் இருந்து அதிகப்படியான ரத்த வெளியேறிய நிலையில், அவர் ஆபத்தான நிலையிலே உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஹோட்டல் அறையை காலி செய்த நபர்.. ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றம்
தலையில் சுடப்பட்ட மாணவரின் நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், அவருக்கு தொடர் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க சுட்டு கொலை செய்யப்பட்ட மாணவர் தலைவர் ஷிக்தர் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆனால், கொலையாளிகள் குறித்தும், அந்த கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாமலும் காவல்துறையினர் குழம்பி தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பை…ரூ.1.08 லட்சத்துக்கு வாங்கிய நபர்…காத்திருந்த அதிர்ச்சி!
ஏற்கனவே சுட்டு கொலை செய்யப்பட்ட மாணவர் தலைவரின் மரண வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு அசாதாரன சூழல் நிலவி வருகிறது.