டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயத்தை வெளியிடும் அமெரிக்கா.. உருவான சர்ச்சை!
America To Release Gold Coin Featuring Donald Trump | அமெரிக்கா ஜூலை 04, 2026 அன்று தனது 250வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பதித்த தங்க நாணயத்தை வெளியிட உள்ளதாக கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன், மாச்ர் 23 : அமெரிக்காவின் (America) 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்பின் (America President Donald Trump) உருவம் பதித்த தங்க நாணயத்தை வெளியிட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. டிரம்பின் உருவ படம் பதித்த தங்க நாணயம் வெளியிடப்படுவது அங்கு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியிடப்படுவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் டிரம்ப்
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டவிரோதமாக குடியேறியவரக்ளை நாடு கடத்துவது, உலக நாடுகளுக்கு வரி விதிப்பது, உலக நாடுகளின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக “Make America Great Again” என சூலுரைத்த டிரம்ப் அதற்கான தீவிர பணிகளை செய்து வருகிறார்.
இதையும் படிங்க : மீண்டும் பரபரப்பு.. ஹோர்முஸ் திறக்க 48 மணி நேரம் கெடு.. ஈரானுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த ட்ரம்ப்!
டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்கா திட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 04 ஆம் தேதி அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், ஜூலை 04, 2026 அன்று அமெரிக்கா தனது 250வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முக்கிய அம்சமாக டிரம்பின் உருவ படம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்.. கதிர்வீச்சு அபாயம்? அதிர்ச்சியில் உலக நாடுகள்
டிரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயத்தால் சர்ச்சை
டிரம்பின் உருவம் பொறித்த இந்த தங்க நாணயம் பொது பயன்பாட்டிற்கு அன்றி, நினைவு பொருளாக மட்டுமே இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், பொதுவாக உயிருடன் இருக்கும் அதிபர்களின் உருவத்தை நாணயங்களில் பொறிக்கும் அமெரிக்காவின் மரபில் இல்லை. இந்த நிலையில், தற்போது டிரம்பின் புகைப்படம் தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் பெரும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்களை கிளப்பியுள்ளது.