வெனிசுலாவின் காபந்து அதிபர் நான் தான்.. டிரம்ப் பகிர்ந்த புகைப்படத்தால் பரபரப்பு!
Donald Trump Shares Controversial Picture | வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே கடுமையான சிக்கல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொறுப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் என இருக்கு புகைப்படத்ட்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப்
நியூயார்க், ஜனவரி 12 : வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு போதைப்பொருள் பயங்கரவாதி என்றும் வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். இந்த நிலையில், 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் வெனிசுலாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவம் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்தி, நாடு கடத்தி தற்போது நியூயார்க் சிறையில் வைத்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
இந்த நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வெனிசுலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுலாவில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுவினர் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு மேலும் 500% வரி?.. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த டிரம்ப்.. அடுத்து என்ன?
வெனிசுலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. அதனால், இதனை பயன்படுத்தி வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் தற்காலிக அதிபர் நான் தான்
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Jan 11 2026, 8:23 PM ET ) pic.twitter.com/ueMAyaXVqK— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) January 12, 2026
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது ஜனாதிபதி என்றும் வெனிசுலாவின் பொறுப்பு ஜனாதிபதி என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.