சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள்!

4.9 Magnitude Earthquake Strikes China | சீனாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Oct 2025 07:50 AM

 IST

பெய்ஜிங், அக்டோபர் 27 : சீனாவில் (China) இன்று (அக்டோபர் 27, 2025) திடீர் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center for Seismology) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அங்கு பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். நிலடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுமானி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், சீனாவை உலுக்கிய நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவை உலுக்கிய திடீர் நிலநடுக்கம் – பீதியில் பொதுமக்கள்

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஹன்சுன் பிராந்தியம் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று (அக்டோபர் 27, 2025) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.9 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அந்த பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ஆட தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 74 வயது முதியவர்.. காத்திருந்த ட்விஸ்ட்!

4.9 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம், சீனாவில் சுமார் 130 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் ரிக்டர் அளவு 4.9 ஆக இருந்ததாகவும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : ‘என்ன காப்பாத்துங்க’.. சவுதியில் சிக்கித் தவிக்கும் இந்திய இளைஞர்!

சற்று குறைவான அளவே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக எந்த தகவலும் வெளிவராமல் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.