இலங்கையில் சிக்கி தவித்த 150 இந்தியர்கள் 5 நாட்களுக்கு பத்திரமாக மீட்பு!

150 Indians Rescued From Colombo Airport | இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்தில் கடந்த ஐந்த நாட்களாக 150 இந்திய பணிகள் சிக்கி தவித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் அனைவரையும் தற்போது இந்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது.

இலங்கையில் சிக்கி தவித்த 150 இந்தியர்கள் 5 நாட்களுக்கு பத்திரமாக மீட்பு!

மீட்கப்பட்ட இந்தியர்கள்

Published: 

01 Dec 2025 08:40 AM

 IST

கொழும்பு, டிசம்பர் 01 : 150 தமிழர்கள் உட்பட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்துக்கொண்டு இருந்தது. இந்த விமானத்தை, இலங்கை வழியே இந்தியாவுக்கு இயக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை சென்ற அந்த விமானம் அங்குள்ள பண்டாரநாயகரே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த நிலையில் தான் இலங்கை கடர்பகுயில் உருவான தித்வா புயல் (Ditwah Cyclone) காரணமாக அங்கு தொடர் மழை பெய்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவித்த 300 பயணிகள்

தித்வா புயல் காரணமாக இலங்கை கடும் சவால்களை சந்தித்தது. குறிப்பாக அங்கு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மழைநீரில் மூழ்கின. இதன் காரணமாக அங்கு ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியது. அதிலும் குறிப்பாக இலங்கைக்கு செல்ல இருந்த விமானங்கள் அனைத்தும், இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக துபாயில் இருந்து இலங்கை சென்ற அந்த விமானம் 300 பயணிகளுடன் 5 நாட்களாக அங்கேயே சிக்கி தவித்து வந்தது.

இதையும் படிஙக் : இலங்கையில் ருத்ரதாண்டவம் ஆடிய ‘தித்வா புயல்’.. பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு.. 130 பேர் மாயம்

விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்பு

விமான நிலையத்தில் சிக்கி தவித்த அந்த பயணிகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, ஆபரேஷன் சாகர்பந்து மூலம் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்களை, அரசு மீட்டுள்ளது. இதனை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்.. உற்றுப்பார்க்கும் அமெரிக்கா.. என்ன நடக்குது?

வேறு யாரேனும் சிக்கியிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையில் சிக்கி தவித்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாரேனும் இலங்கையில் சிக்கியிருந்தால் அவர்கள் 773727832 என்ற அவர உதவி எண்ணை தொடர்புக்கொள்ளலாம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. தித்வா புயலால் இலங்கை கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில், இதுவரை இந்திய விமானப்படை சுமார் 21 டன்கள் நிவாரண பொருட்கள் மற்றும் 80 தேசிய பேரிடர் நிவாரண குழுவை சேர்ந்தவர்களையும் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரியன் மறைந்த பிறகு ஏன் நகம் வெட்டக்கூடாது?
ஒரே காரில் வலம் வந்த தோனி - கோலி கூட்டணி - வைரலாகும் வீடியோ
அவரை அடிக்க வேண்டும் என தோன்றியது... ரஹ்மான் குறித்து சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா
‘உருவானது கொசு தொழிற்சாலை’.. டெங்குக்கு எதிராக மக்களை பாதுகாக்க புதிய திட்டம்!!