காலை 6 மணி முதல் மது விற்பனை.. பாமக வேட்பாளர் திலகபாமா செய்த செயல்..
பெரம்பூர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா, கொடுங்கையூர் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள வியாசன் நகர் 4ஆம் எண் டாஸ்மாக் கடையில் காலை 6 மணி முதலே மது விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள KGF பாரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை நடைபெற்று வந்ததும் தெரியவந்தது.
பெரம்பூர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா, கொடுங்கையூர் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள வியாசன் நகர் 4ஆம் எண் டாஸ்மாக் கடையில் காலை 6 மணி முதலே மது விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள KGF பாரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாமக வேட்பாளர் திலகபாமாவின் புகாரின் அடிப்படையில், பதுக்கி வைத்திருந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Follow Us
Latest Videos
