கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

Jul 09, 2025 | 12:12 AM

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இன்று கோயம்புத்தூரில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், அதிமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சி கோயம்புத்தூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுக்கூட்டத்தின் போது நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள், எதிர்காலத்தில் அதிமுக வெற்றிக்காக பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்தனர்.விழாவின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, போர்களத்தில் சிப்பாய்கள் எப்படி இருப்பார்களோ அதே போல தேனீக்களை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு நம் இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.