அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பிரிந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, உரிய நேரத்தில் தங்களுக்கு பதில் கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஒரு பக்கம் அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையக்கூடும் என்ற யூகங்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், மற்றொரு பக்கம் அவர் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.