Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video: ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக கையால் பிடித்த ரயில்வே அதிகாரி!

Railway Staff Rescues Venomous Snake : திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் விஷப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர் துணிச்சலாக பாம்பை பிடித்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் வீடியோவாகி இணையத்தில் வைரலானது. பலர் ஊழியரின் செயலை பாராட்டினர். ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக கையால் பிடித்த ரயில்வே அதிகாரி!
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Published: 13 May 2025 20:00 PM

இந்தியாவைப் (India) பொறுத்தவரைக்கும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் போக்குவரத்தாக இருந்து வருவது ரயில் (Train)  என்று கூறலாம். இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு நாளில் பல லட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். அதிலும் வட இந்தியாவில் பிரதான போக்குவரத்தாக ரயிலைத்தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியைத் தரும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த என்னவென்றால் திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் (Dibrugarh Rajdhani Express)  உள்ள கழிப்பறை (Toilet)  ஒன்றில் கொடிய விஷமுடைய பாம்பைப்  (deadly poisonous snake) பயணி ஒருவர் (Passenger) கண்டுபிடித்துள்ளார். இந்த சம்பவமானது கடந்த 2025, மே 4 தேதியில் புதுடெல்லியில் இருந்து புறப்பட திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ளது. அந்த ரயிலில் பயணி ஒருவர் கழிப்பறையைப் பயன்படுத்தும்போது பாம்பு இதைக் கண்டுபிடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே அதிகாரி பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்தி, கழிப்பறையில் இருந்த பாம்பைப் பிடித்திருக்கிறார். தனது கையால் அசால்டாக பிடித்த அதிகாரி, பிளாஸ்டிக் பையால் அந்த பாம்பைப் பிடித்து, ஓடும் ரயிலிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் சிலருக்குப் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கவனம் பெரும் வீடியோ :

இந்த வீடியோவில், ரயில்வே ஊழியர் ஒருவர் கழிவறையில் இருக்கும் பாம்பை பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்திப் பிடித்துள்ளார். பின் அந்த பாம்பை அப்புறப்படுத்தும் விதத்தில் பிளாஸ்டிக் பையினுள் வைத்து ரயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியே தூக்கி இருந்துவிட்டார். இந்த காரணமாக ரயிலில் நடக்கவிருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. சாதாரணமாக ரயிலில் பாம்புகள் வருவது, விஷ ஜந்துக்கள் வருவதும் சகஜமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

பொதுவாக நீண்ட தோற்றம் செல்லும் ரயில், இரயிவே நிலையத்தில் பல மணிநேரங்களாக நிற்கும். அதிலும் தற்போது வெயில் கொளுத்திவரும் நிலையில், நாமே எதாவது குளிரான இடத்தை நோக்கித்தான் செல்கிறோம். அதைப் போலத்தான் உயிரினங்களும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், குளுமையான இடத்தை நோக்கிச் செல்கின்றன. இந்நிலையில், இதுபோன்ற விஷயங்கள் நடப்பது சகஜமான ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் இந்த வீடியோவில் ரயில்வே ஊழியர் செய்த அசாதாரண செயல்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தது வருகின்றனர். இதில் முதல் பயனர் ஒருவர் “அந்த ரயில்வே ஊழியர் தனது கைகளால் பாம்பை அசாதாரணமாக அகற்றியுள்ளார், அவருக்கு நிச்சயமாக எனது பாராட்டுக்கள் கிடக்கும் என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “நல்லவேளை கழிப்பறைக்குள் செல்வதற்கு முன் அந்த பாம்பைப் பார்த்துள்ளனர், இல்லையென்ற நடந்திருப்பதே வேறு என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.