Viral Video : ரயில் ஏசி முதல் கோச்சில் பெட்ஷீட் திருடிய குடும்பம்.. கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரல்!

Snake in Western Toilet | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் ஒரு குடும்பம் ஒன்று ரயிலின் முதல் ஏசி கோச்சில் இருந்து பெட்ஷீட் திருடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : ரயில் ஏசி முதல் கோச்சில் பெட்ஷீட் திருடிய குடும்பம்.. கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரல்!

வைரல் வீடியோ

Published: 

21 Sep 2025 23:49 PM

 IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் நிலையில், சில வீடியோக்கள் குற்ற சம்பவங்களை வெளிப்படுத்தும் விதமாக அமையும். இவ்வாறு பல வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பெண் ரயிலின் ஏசி கோச்சில் இருந்த பெட்ஷீட்டுகளை தனது குடும்பத்தினர் உடன் தங்களது பைகளில் வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசி கோச்சில் பெட்ஷீட்டுகளை திருடிச் சென்ற குடும்பத்தினர்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்தாக உள்ளது. காரணம், ரயில்களில் குறைந்த விலையில் அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால ஏராளமான பொதுமக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்காக பொதுப் பெட்டி, சிறப்பு பெட்டி, ஏசி பெட்டி என பல வகையான பெட்டிகள் உள்ளன. இதில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்காக ரயில்வே நிர்வாகம் பெட்ஷீட்டுகளை வழங்கும். இந்த நிலையில், ஏசி பெட்டியில் பயணம் செய்த குடும்பம் பெட்ஷீட்டை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பாட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் அழுத Golden Retriever.. உணர்ச்சி பொங்கும் வீடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஏசி கோச் கண்காணிப்பாளர் ஒரு குடும்பத்தினரை பிடித்து விசாரணை மேற்கொள்கிறார். அப்போது, இந்த பைகளில் இருந்து பெட்ஷீட்டுகள் வெளியே வருவதை பாருங்கள். டவல்கள், பெட்ஷீட்டுகள் எல்லாம் வெளியே வருகின்றன. அந்த பெட்ஷீட்டுகளை கொடுங்கள் அல்லது ரூ.780 பணம் செலுத்துங்கள் என்று கூறுகிறார். அப்போது அந்த பெண்ணின் மகன் எனது தாய் உடைமைகளை பேக் செய்யும்போது தவறுதலாக எடுத்து வைத்துவிட்டார் என்று கூறுகிறார். ஆனால், அவற்றை எல்லாம் நம்பாத அந்த பாதுகாவலர் ஏசி முதல் கோச்சில் பயணம் செய்கிறீர்கள் பிறகு ஏன் திருடுகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.