Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : வெறித்தனமான RCB Fan போல.. திருமண வரவேற்பை நிறுத்தி வைத்துவிட்டு ஐபிஎல் பார்த்த ஜோடி!

Couple Pauses Wedding Reception to Watch IPL | ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை பலரும் பல விதமாக கொண்டாடினர். அந்த வகையில், புதுமண தம்பதி ஒன்று திருமண வரவேற்பை நிறுத்தி வைத்துவிட்டு கிரிக்கெட் பார்த்து கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : வெறித்தனமான RCB Fan போல.. திருமண வரவேற்பை நிறுத்தி வைத்துவிட்டு ஐபிஎல் பார்த்த ஜோடி!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2025 18:58 PM

ஐபிஎல் (IPL – Indian Premier League) இறுதி போட்டியை காணுவதற்காக ஜோடி ஒன்று தங்களது திருமண வரவேற்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, வரவேற்பு அறையிலே டிவியில் கிரிக்கெட் போட்டி பார்த்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. நேற்று (ஜூன் 03, 2025) நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியை ஏராளமான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். பல ஆண்டுகள் கழித்து ஆர்சிபி அணி வெற்றி இலக்கை அடையும் பயணமாக நேற்றைய போட்டி இருந்த நிலையில், பலரும் உற்சாகத்துடன் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்தனர். இந்த நிலையில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்திற்கு நடுவே கிரிக்கெட் பார்த்தது தற்போது வைரலாகி வருகிறது.

ஆர்சிபி வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஐபிஎல்-ல் இறுதி போட்டி நேற்று (ஜூன் 03, 2025) நடைபெற்றது. நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பான போட்டி நிலவிய நிலையில், பொதுமக்களின் மொத்த கவனமும் ஐபிஎல் பக்கம் தான் இருந்தது. காரணம் ஆர்சிபி அணி வெற்றியை நெருங்கி விளையாடிக்கொண்டு இருந்தது.

ஆர்சிபி அணி கடந்த 18 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை பெறாத நிலையில், அந்த அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் அது நிறைவேறாதா கணவாகவே இருந்தது. இந்த நிலையில், ஆர்சிபி வெற்றியை நோக்கி விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், புதுமண தம்பதியினர் தங்களது திருமண வரவேற்பை சற்று நிறுத்தி வைத்துவிட்டு ஐபிஎல் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் திருமண மண்டபத்தில் வரவேற்பு மேடையில் நிக்க வேண்டிய மணமகன் மற்றும் மணமகள், அங்கு வைக்கப்பட்டு இருக்கும் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்துக்கொண்டு ஐபிஎல் இறுதி போட்டியை கண்டுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியில் கத்தில் கூச்சலிடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...