Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : ‘தனுஷ் படத்தில் வில்லி கதாபாத்திரம்’- திரிஷா கிருஷ்ணன்!

Trisha Krishnan : தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நாயகியாக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் படமானது வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் படத்தில் நெகட்டி ரோலில் நடிக்கவேண்டுமா என்று யோசித்ததாகக் கூறியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : ‘தனுஷ் படத்தில் வில்லி கதாபாத்திரம்’- திரிஷா கிருஷ்ணன்!
திரிஷா கிருஷ்ணன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Jun 2025 09:22 AM

தென்னிந்திய நட்சத்திர நடிகைகளில் ஒருவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் பல வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களில் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இவரின் நடிப்பில் விடாமுயற்சி (Vidaamuyarchi), லியோ(Leo), குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப்  (Thug Life) என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் பிரவீன் காந்த் இயக்கத்தில் வெளியான ஜோடி (Jodi)என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார் திரிஷா. அதைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகியாகவே தனது நடிப்பைத் தொடர்ந்தார். இவர் தென்னிந்தியாவில் நடிகை நயன்தாராவைத் தொடர்ந்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். மேலும் நயன்தாராவை விடவும் பல படங்களில் அதிக சம்பளம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா கிருஷ்ணன் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில், தனுஷுடன் கொடி படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டுமா என்று நினைத்ததை பற்றிப் பேசியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

தனுஷுடன் கொடி படத்தில் நடித்தது குறித்து திரிஷா கிருஷ்ணன் பேச்சு :

முன்னதாக பேசிய நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கிருஷ்ணன், நான் ஆரம்பத்தில் இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் என்னிடம் கொடி படத்தின் கதையைக் கூறும்போது , அதில் நடிக்கவேண்டுமா ன்று நினைத்தேன். பின் இயக்குநர்தான் என்னை வலுக்கட்டாயப் படுத்தி அந்த படத்தில் நடிக்கவைத்தார், அதற்காக நிச்சயமாக இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமாருக்கு நன்றி சொல்வேன்.

கொடி படத்தில் நான் நெகட்டிவ் ரோலில் நடித்ததற்கு மிகவும் சந்தோசப்படுகிறேன். மேலும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று நடிகை திரிஷா கிருஷ்ணன் கூறியிருந்தார்.

திரிஷா – தனுஷின் கொடி திரைப்படம் :

தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் கொடி. இந்த படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் திரிஷா வில்லியாக நடித்திருந்தார். இதற்காக இவருக்குப் பல பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தது என்றே கூறலாம்.அந்த அளவிற்கு மிகவும் அருமையாக நடித்திருந்தார். இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் ஓரளவே வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.