Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : உணவுக்காக சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த யானை.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்!

Elephant Escaped From National Park | சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது அந்த பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் வாகனங்களை நிறுத்தி அவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களை பிடுங்கி சாப்பிடுவதை பார்த்திருப்போம். ஆனால், தாய்லாந்தில் தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய யானை ஒன்று நேராக சூப்பர் மார்கெட்டிற்கு சென்று தனக்கு பிடித்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டுள்ளது.

Viral Video : உணவுக்காக சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த யானை.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jun 2025 19:17 PM

மனிதர்களும், விலங்குகளும் வெவ்வேறு கால சூழ்நிலையில் வாழக்கூடிய உயிரினங்களாக உள்ளன. குறிப்பாக, மனிதர்கள் சமவெளி பகுதியில் வாழும் நிலையில் விலங்குகள் காட்டுப்பகுதியில் வாழ்கின்றன. விலங்குகள் சுதந்திரமாக நடமாடக் கூடியவை என்பதால் காடு முழுக்க உலாவி தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகிய அத்தியாவசியங்களை அவை தேடிக் கொள்ளும். இதன் காரணமாக, அவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வராது.

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் காடுகளுக்குள் மனிதர்களின் ஊடுருவல் அதிகமாக இருப்பதால் காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டப்படுவது விலங்குகளின் வாழ்விடத்தையும் அவற்றின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் விதமாக உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது விலங்குகள் உணவு தேடி, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைகின்றன. அந்த வகையில் தாய்லாந்தில் யானை ஒன்று உணவு தேடி சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

உணவு தேடி சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த யானை

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் யானை ஒன்று சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து தனக்கு விருப்பமான உணவுகளை எடுத்து சாப்பிடுகிறது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்களை யானையை மிரட்டுகின்றனர். ஆனால் அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாத அந்த யானை தொடர்ந்து உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

உணவு தேடி பூங்காவில் இருந்து வெளியேறிய யானை

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இருப்பது 23 வயதாகும் பிளாய் பியாங்க் என்ற யானை என்பது தெரிய வந்துள்ளது. இந்த யானை அந்த பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் இருந்த நிலையில், அங்கிருந்து தப்பித்து உணவு தேடி இந்த கடைக்குள் நுழைந்துள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். யானைகள் சாப்பிடும் வழக்கமான உணவுகள் சாப்பிட்டு சளித்துவிட்ட நிலையில், புதிய வகை உணவுகளை தேடி யானை வந்துள்ளது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். யானைகள் நாகரிகமாகிவிட்டன, அவை இலை தழைகளை சாப்பிடுவதில்லை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.