Viral Video : இப்படி ஒரு பக்தியா?.. பிறந்தநாள் கேக்கில் எரிந்த மெழுகு.. தலை குணிந்து கும்பிட்ட சிறுமி!

Child Mistakenly Worships Birthday Candle | பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுவது இயல்பான ஒன்றுதான். பிறந்தநாள் கேக்கை வெட்டும் நபர் முதலில் மெழுகுவர்த்தியை அணைத்திவிட்டு பிறகு கேக்கை வெட்டுவார். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் சிறுமி ஒருவர் பிறந்தநாள் கேக்கில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியை ஊதி அணைக்காமல் அதனை சூடம் என தொட்டு கும்பிடுகிறார்.

Viral Video : இப்படி ஒரு பக்தியா?.. பிறந்தநாள் கேக்கில் எரிந்த மெழுகு.. தலை குணிந்து கும்பிட்ட சிறுமி!

வைரல் வீடியோ

Updated On: 

20 Jul 2025 17:58 PM

குழந்தைகளுக்கு நாம் எதை சொல்லி கொடுக்கிறோமோ, நாம் எதை செய்றோமோ அதை தான் அவர்கள் தங்களது வாழ்க்கையில் கடைபிடிப்பார்கள். அந்த வகையில், சூடத்தை பார்த்து சாமி கும்பிட வைக்கப்பட்ட குழந்தை ஒன்று, தனது பிறந்தநாள் கேக்கில் எரிந்த மெழுகுவர்த்தியை பார்த்து சாமி கும்பிட்ட வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. நெருப்பு என்றாலே அது கடவுள் என நினைந்துழ் அந்த குழந்தை இவ்வாறு செய்துள்ளது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

பிறந்தநாள் கேக்கில் இருந்த மெழுகுவர்த்தி – சாமி என நினைத்து கும்பிட்ட குழந்தை

பொதுவாக பிறந்தநாள் அன்று வெட்டப்படும் கேக்கில் மெழுகுவர்த்தி ஏத்தப்படும். பிறந்தநாள் கேக் வெட்டும் நபர் முதலில் அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு தான் கேக்கை வெட்டுவார். ஒரு வயது முடிந்து அடுத்த வயது தொடங்குவதற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது. அந்த வகையில் தனது பிறந்தநாள் கேக்கில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியை சூடம் என நினைத்த சிறுமி அதனை தொட்டு கும்பிடும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இது ஆட்டோவா இல்ல நூலகமா?.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் சிறுமியின் கியூட் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் தனது பிறந்தநாள் அன்று புத்தாடை அணிந்து கேட் வெட்டுவதற்காக தயாராக உள்ளார். அவர் முன்னே கேக் ஒன்று வைக்கப்பட்டு அதில் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டுள்ளது. அதனை பார்த்த அந்த சிறுமி, சூடம் என நினைத்து தொட்டு கும்பிடுகிறார். அதனை பார்த்து சிறுமியின் குடும்பத்தினர் சிரிக்கின்றனர். ஆனால், சிறுமியோ மிகவும் பணிவுடன் மீண்டும் மீண்டும் எரியும் மெழுகுவர்த்தியை தொட்டு கும்பிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும்போது சிறுமியை அவரது வீட்டார் எவ்வாறு சிறந்த கலாச்சார பண்பாட்டுடன் வளர்த்துள்ளனர் என்பது புரிகிறது என்று ஒருவர் கூறியுள்ளார். இதுதான் சரியான வளர்ப்பு என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.