Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : லண்டனில் இளநீர் விற்பனை செய்யும் இங்கிலாந்தவர்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!

British Man Sells Coconut Water in London | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் இந்தியர்களை போலவே இளநீர் விற்பனை செய்யும் சுவாரஸ்யமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : லண்டனில் இளநீர் விற்பனை செய்யும் இங்கிலாந்தவர்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 21 May 2025 18:56 PM

உலகில் பல நாடுகள் உள்ளன, இந்த ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு வகையான உணவு பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளின் புவி அமைப்பு, காலநிலை உள்ளிட்டவற்றை அங்கு உணவு பொருட்கள் விளைவிக்கப்படும். இதன் காரணமாக ஒரு நாட்டை விட மற்றொரு நாட்டில்  உணவு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆனால், தற்போது ஏற்றுமதி, இறக்குமதிக்கான போக்குவரத்து அம்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒரு நாட்டில் கிடைக்காத பொருள் மற்றொரு நாட்டில் மிக எளிதாக கிடைக்கிறது. உலக நாடுகள் தங்களுக்குள்ளாக பொருட்களை ஏற்றுமதி செய்துக்கொள்ளும் நிலையில் இது சாத்தியமாகிறது. அந்த வகையில், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் லண்டன் சாலையில் இளநீர் விற்பனை செய்யும் வீடியோ வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

லண்டன் சாலையில் இளநீர் விற்பனை செய்யும் இங்கிலாந்தவர்

இந்தியாவில் கோடை காலங்களில் சில உணவு பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படும். குறிப்பாக தர்பூசணி, இளநீர், கூழ், மோர் உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யபப்டும். இதில் இளநீர் மிகவும் சிறந்த ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ள நிலையில், பலரும் அதனை விரும்பி பருகுகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் லண்டனில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த நபர் இந்தியாவில் வியாபாரிகள் எவ்வாறு இளநீரை வெட்டி விற்பனை செய்வார்களோ அதேபோல வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். இளநீர் விற்பனை செய்வது சாதாரனம் தான். ஆனால், அந்த நபர் இளநீரை “நாரியல் பாணி” என கூவி கூவி விற்பனை செய்கிறார். நாரியல் பாணி என்பது இளநீரை குறிக்கும் இந்தி வார்த்தை ஆகும். இங்லிலாந்தை சேர்ந்த நபர் இந்தியர்களை போலவே இளநீர் விற்பனை செய்வதால் இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த நபர் அச்சு அசல் இந்தியர்களை போல பேசி இளநீர் விற்பனை செய்வதாக சிலர் கூறியுள்ளனர். சிலர் இப்படி ஒரு விஷயம் இங்கிலாந்தில் உள்ளதா என மிகவும் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?...
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !...
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?...
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்...
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!...
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!...
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!...
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!...