Delhi NCR Weather: டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை.. விமானங்கள் தாமதம், மின் தடை! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Hailstorm Delhi: டெல்லி-NCR பகுதியில் மே 21, 2025 அன்று திடீர் வானிலை மாற்றத்தால் கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, மின் தடை மற்றும் விமான தாமதங்கள் ஏற்பட்டன. சஃப்தர்ஜங்கில் மணிக்கு 79 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கிழக்கு டெல்லியில் புழுதிப் புயலும் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

டெல்லி, மே 21: டெல்லி என்.சி.ஆரில் (Delhi-NCR) இன்று அதாவது 2025 மே 21ம் தேதி வானிலை திடீரென்று மாறியது. பலத்த மழை மற்றும் புயலால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதீத மழை (Heavy Rain) காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் சஃப்தர்ஜங்கில் மணிக்கு 79 கிமீ வேகத்தில் காற்று வீசியது. பலத்த புயலுடன் கூடிய கனமழையும், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மறுபுறம், கிழக்கு டெல்லியில் உள்ள யமுனா, விஹார், பஹன்புரா மற்றும் கோகல்புரி போன்ற பகுதிகளில் பலத்த புழுதிப் புயல் வீசியது.
இடியுடன் கூடிய மழை:
#WATCH | Delhi: A tree uprooted at Teen Murti Marg as the city receives gusty wind, heavy rainfall and hailstorm. pic.twitter.com/JtySqurVs2
— ANI (@ANI) May 21, 2025
தலைநகர் டெல்லியில் திடீரென்று வானிலை மாறியது. இரவு 8 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. இதை தொடர்ந்து, மழை காரணமாக பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இது டெல்லி மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்ததாலும், சிறிது நேரத்தில் இவர்களது அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, மேற்கத்திய இடையூறு மற்றும் உள்ளூர் ஈரப்பதத்தின் மோதலால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மாவட்டங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தொடர்ந்து, டெல்லி நொய்டாவிலும் பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
விமானங்கள் தாமதம்:
#WATCH | Gusty winds and heavy rainfall hit Delhi, as it experiences a change in weather.
Visuals from T3 of Indira Gandhi International Airport. pic.twitter.com/eOlVDelNZr
— ANI (@ANI) May 21, 2025
பலத்த காற்று, கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சில விமானங்கள் தாமதமாகின. இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக, டெல்லியில் வானிலையில் மாற்றம் காணப்பட்டது. மழையின் போது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் T3 இல் தண்ணீர் தேங்கியுள்ளது. விமான நிலையத்தில் தரைப்படையினர் நிலைமையை இயல்பாகப் பராமரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.