ஏஸ் முதல் நரிவேட்ட வரை… இந்த வாரம் தியேட்டரில் என்ன படம் பார்க்கலாம்?
Theatre Release Movies: கடந்த வாரம் மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல், ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் ஏஸ் படம் முதல் டொவினோ தாமஸின் நரிவேட்ட வரை இந்த வாரம் வெளியாகும் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏஸ்: நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சூரியும் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஏஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஆறுமுகக் குமார் இயக்கியுள்ளார். மேலும் இவரே இந்தப் படத்தை தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிகை ருக்மணி நடித்துள்ளார். இந்தப் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஏஸ் படம் வருகின்ற 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசாதி: நடிகர் ஸ்ரீநாத் பாஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆசாதி. இந்தப் படத்தை இயக்குநர் ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வாணி விஸ்வநாத், சைஜு குருப், லால், ரவீனா ரவி என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் வருண் உன்னி இசையமைத்துள்ள நிலையில் படத்தை லிட்டில் க்ரூ புரொடக்ஷன் பானரின் கீழ் ஃபைசல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேம்பு: நடிகர்கள் ஷீலா மற்றும் ஹரி கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேம்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஜஸ்டின் பிரபு வி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் மணிகண்டன் முரளி இசையமைத்துள்ள இந்தப் படம் 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நரிவேட்ட: நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் நரிவேட்ட. இந்தப் படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியம்வதா கிருஷ்ணன் மற்றும் சேரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சேரன் இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில் படத்தை இந்தியன் சினிமா கம்பெனி பானரின் கீழ் திப்புஷன், ஷியாஸ் ஹாசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.