Samantha Ruth Prabhu : விஜய் படமா? அஜித் படமா?.. நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!
Samantha About Actors Ajith And Vijay Movies : பிரபல பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் படங்களில் நடிப்பதையும் கடந்து, படங்களைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் முன்னதாக நேர்காணல் ஒன்றில், அஜித் படமா அல்லது விஜய் படமா என்ற கேள்விக்கு அதிர்ச்சியான பதில் அளித்திருந்தார், அது என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நடிகை மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் கலக்கி வருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக இவர் எந்த படங்களையும் நடிக்கவில்லை என்று அனைவருக்கும் தெரிந்ததே. அந்த விதத்தில் நடிகை சமந்தா தயாரிப்பு நிறுவனம் (Production company) ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனத்தின் பெயர் டிரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் (Tralala Moving Pictures) நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் தெலுங்கில் சுபம் (Shubham) என்ற படத்தைத் தயாரித்திருந்தார். கடந்த 2025, மே 9ம் தேதியில் வெளியான இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்தும் அடுத்தடுத்த படங்களைத் தயாரிப்பதற்குக் கதைகளைக் கேட்டு வருகிறார். தற்போதுள்ள நடிகர்கள் படங்களில் நடிப்பதையும் கடந்து, தயாரிக்கும் பணியிலும் இறங்கியுள்ளனர்.
அந்த விதத்தில் நடிகை சமந்தாவும் படங்களைத் தயாரிக்கும் பணியில் இருந்து வருகிறார். சமந்தா தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை பல மொழிகளில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான படம் குஷி (Kushi). இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார்.
இவர் தமிழில் விஜய் முதல் சூர்யா வரை பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இவர் முன்னதாக அளித்திருந்த பேட்டி ஒன்றில், நடிகர் அஜித் படம் பிடிக்குமா அல்லது விஜய் படம் பிடிக்குமா என்ற கேள்விக்கு நடிகை சமந்தா நக்கலாகப் பதிலளித்திருந்தார். அது என்ன என்பதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை சமந்தா பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில், தொகுப்பாளர் சமந்தாவிடம் திரையரங்கில் ஒரு புறம் விஜய்யின் திரைப்படம் ஓடுகிறது, இன்னொரு புறம் அஜித்தின் படம் ஓடுகிறது அதில் எந்த படத்திற்கு நீங்கள் போவீர்கள் ? என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகை சமந்தாவும் சிரித்தபடியே நான் வீட்டிலே உட்காந்திருப்பேன், அப்படியென்றால் அந்த திரையரங்கு பக்கமே போகமாட்டேன். எனக்கு இந்த இருவரையுமே பிடிக்கும். அதனால் ஒருவரின் படத்திற்கும் மட்டும் போகமாட்டேன் என்றார் நடிகை சமந்தா சிரித்தபடியே கூறியிருந்தார்.
விஜய் – சமந்தாவின் கூட்டணி படங்கள் :
நடிகர் விஜய்யுடன், நடிகை சமந்தா கிட்டத்தட்ட 3 படங்கள் நடித்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான கத்தி படத்தின் மூலம் முதன் முதலாக ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் வெளியான தெறி மற்றும் மெர்சல் போன்ற படங்களிலும் விஜய்யுடன் ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் நடிகை சமந்தா அஜித் குமாருடன் எந்த படங்களிலும் இணைந்தது நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.