20 வயசுல ஹீரோயின் ஆவது பெரிய விசயம் அல்ல… 20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு – நடிகை த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக தன்னை நாயகி அந்தஸ்தில் இருந்து விலக்கிக் கொள்ளாமல் தக்க வைத்து வருகிறார். அவரை முன்னதாக பட விழா ஒன்றில் நடிகர் விஜய் பாராட்டி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 1999-ம் ஆண்டு இயக்குநர் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளியான ஜோடி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். நடிகர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநர் அமீர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யா மற்றும் த்ரிஷாவின் ஜோடி சேரவில்லை என்றாலும் இவர்களின் காம்போவை ரசிகர்கள் கொண்டாடினர்.
முன்னணி நடிகர்களின் நாயகி:
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ரவி மோகன், கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிலம்பரசன், ஆர்யா, தனுஷ், கார்த்தி என பலருக்கு தமிழில் நாயகியாக நடித்தார். அதே போல தென்னிந்திய மொழியில் உள்ள முன்னணி நடிகர்களுக்கும் நாயகியாக நடித்து வருகிறார்.
ரசிகர்கள் கொண்டாடும் விஜய் – த்ரிஷா ஜோடி:
தமிழ் சினிமாவில் பல ரீல் ஜோடிகளை ரசிகர்களுக்கு பிடிக்கும். அதே போல த்ரிஷா – விஜய் ஜோடி சேரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்த விஜய் – த்ரிஷா கூட்டணி:
2008-ம் ஆண்டு இந்த ஜோடியின் நடிப்பில் வெளியான குருவி படத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்களாக இவர்கள் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் 2023-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் மூலம் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதன்படி இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இளவரசி என்று த்ரிஷாவை புகழ்ந்த விஜய்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்தின் விழா ஒன்றில் நடிகர் விஜய் த்ரிஷாவைப் புகழ்ந்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
View this post on Instagram
அதன்படி அந்த வீடியோவில் அவர் ஒரு பெண் 20 வயதில் ஹீரோயினாக இருப்பது பெரிய விசயம் இல்லை. ஆனால் ஒரு பெண் 20 வருடங்களாக தன்னை ஹீரோயினாக நிலைநிறுத்தி இருப்பது பெரிய விசயம் என்றும் அது வேறு யாருமில்லை நம்ம இளவரசி குந்தவை தான் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.