Viral Video : பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Indian Origin Woman Travel with Indian Traditional Attire | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு வகையான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வகையில், இந்திய வம்சாவளி இளம் பெண் ஒருவர் பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியா பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் மேலோங்கி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் இந்திய கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கு தனி சிறப்பு உள்ளது. இந்திய கலாச்சாரத்தை பொருத்தவரை உடை அலங்காரம், சிகை அலங்காரம், அணிகளன்கள் என அனைத்தும் மிகவும் தனித்துவமாகவும், சிறப்பு மிக்கவையாகவும் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய பெண்களின் உடை கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் விதமாக உள்ளது. இந்த நிலையில், இளம் பெண் ஒருவர் பாரிசில் இந்திய பாரம்பரியம் கொண்ட உடையை அணிந்து அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையுடன் பயணித்த இளம் பெண்
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் இந்திய பாரம்பரிய உடையை அணிந்து பாரிஸ் மெட்ரோவில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாரிஸ் உள்ள மேற்கத்திய நாடுகள் இந்தியாவை விட வித்தியாசமான உடை கலாச்சாரத்தை கொண்டுள்ள நிலையில், அத்தகைய பகுதியில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இந்திய பாரம்பரிய உடையை அணிந்து சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் இளம் பெண்ணின் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாரிசில் மெட்ரோவில் பயணிக்கிறார். அவர் இந்திய இளம் பெண்கள் அணியும் லெஹங்காவை அணிந்துள்ளார். அதுமட்டுமன்றி, மணப்பெண்ணை போல இந்திய பாரம்பரிய ஆபரணங்களை அணிந்துள்ளார். பாரிசுக்கு சற்றும் தொடர்பு இல்லாத வித்தியாசமான உடையையும், ஆபரணங்களையும் அவர் அணிந்துள்ளது அங்கு இருப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள ஒருவர், இந்திய கலாச்சரத்தை பாரிசில் இந்த பெண் மிக சிறப்பாக காட்சி படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார். இந்தியா பெண்களின் உசை அலங்காரமும், ஆபரண அலங்காரமும் தனி சிறப்பும், அழகும் கொண்டிருக்கும் என்று மற்றொருவர் கருத்து பகிர்ந்துள்ளார்.