Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

CSKvMI : தல தோனியின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி – நெகிழ்ச்சி சம்பவம்

CSKvRR : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சென்னை அணியின் தல எம்எஸ் தோனியின் காலில் விழுந்து ஆசிபெற்றார்.

CSKvMI : தல தோனியின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி  – நெகிழ்ச்சி சம்பவம்
எம்.எஸ்.தோனி - வைபவ் சூர்யவன்ஷி
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 21 May 2025 00:00 AM

ஐபிஎல் 2025 -ன்(IPL) 62வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸை (Chennai Super Kings) 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அபாரமான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்தப் போட்டியின் முடிவு  இரு அணிகளையும் பெரிதாக பாதிக்காது. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பில்லை. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் 10வது முறையாக தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

187 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  இதன் பிறகு, களமிறங்கிய ஆயுஷ் மத்ரே அதிரடியாக விளையாடி பவர்பிளேயில் ரன்களை சேர்த்தார்.  20 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர்  என 43 ரன்கள் எடுத்த ஆயுஷ் மத்ரே விரைவிலையே வெளியேறினார்.  ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருக்க இதன் டெவால்ட் பிரெவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அணியை பெரிய ஸ்கோர் எடுப்பதற்கு காரணமாக அமைந்தார். மேலும் சிவம் துபே தன் பங்குக்கு 39 ரன்கள் எடுத்தார், இதன் காரணமாக சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

தல தோனியிடம் ஆசிர்வாதம் வாங்கிய வைபவ் சூர்யவன்ஷி

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே சிறப்பாக இருந்தது.  யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதே நேரத்தில், வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றியை நோக்கி எளிதாக அழைத்து சென்றார். வைபவ் சூர்யவன்ஷி தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். மறுபுறம், கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்கள் எடுத்தார். பின்னர் துருவ் ஜூரெல் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டிக்கு பிறகு வைபவ் சூர்யவன்ஷி தல தோனியின் காலில் விழுந்து ஆசிபெற்றார். இதனையடுத்து வைபவை தட்டிக்கொடுத்து தோனி பாராட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி...
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!...
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!...
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!...
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!...
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!...
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்...
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!...
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?...
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...