Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் – இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு

Karnataka Train Incident : கர்நாடகாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர், இளைஞரை இழுத்துத் தள்ளிய சம்பவம் வீடியோவாகி வைரலாகியுள்ளது. ரயிலில் ஏற முயன்ற முதியவரும் இளைஞரும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கினர். அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் ரயில் பயணத்தின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் – இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Published: 19 May 2025 21:38 PM

இந்தியாவைப் (India) பொறுத்தவரையில் ரயில் போக்குவரத்து (Rail transport) மிகவும் அவசியமான ஒன்றா இருந்து வருகிறது. நாள் முழுக்க லட்சம் பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓடும் ரயிலில் ஏறமுயன்று, ரயிலில் தொங்கியபடியும் பலவிதமான பரபரப்பு வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவதுண்டு. அந்த வகையில் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவமானது கர்நாடகா (Karnataka) மாநிலத்தில் எதோ ஒரு ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ரயிலானது பிளாட்பாரத்திலிருந்து கிளம்பு தொடங்கிவிட்டது.  இதை  அடுத்து வயதான நபர் ஒருவர் (Old Man) , ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்கிறார். பின் அந்த ரயிலிலும் ஏறிவிடுகிறார். அந்த முதியவர் ஓடும் ரயிலில் ஏறியது மட்டுமல்லாமல், ரயிலில் தொங்கிக் கொண்டிருந்த, மற்றொரு இளைஞரையும்  (young man) கீழே பிடித்து இழுத்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்கள் இருவரும் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடுக்கில் சிக்குவது போல வீடியோவில் தெரிகிறது. நல்லவேளையாக அவர்கள் இருவருக்கும் எத்தனை விதமான காயங்களும், உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் அந்த முதியவர் மீதுதான் தவறு இருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by Desi Cravings (@desi_cravings_)

இந்த வீடியோவில், முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறமுயன்று, இளைஞர் ஒருவரை இடித்துத் தள்ளினார். இந்த சம்பவமானது கர்நாடகாவில் நடந்ததாகத் தெரிகிறது. ஒரு வயதான மனிதர் ரயிலில் ஏறுவதற்காக ரயில் நிலையத்திற்கு வருகிறார். ஆனால் ரயில் ஏற்கனவே நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவன் ரயிலில் ஏற முயன்று, ஓடிவந்து ரயில் கதவைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அங்கே ஏற்கனவே சிலர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில், முதியவர் தனது நிதானத்தை இழந்த நிலையில், அங்குள்ள இளைஞனைப் பிடித்துக் கொள்கிறார். இதனால் இருவரும் கட்டுப்பாட்டை இழந்து ஒரே நேரத்தில் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் விழுவதைப் பார்த்த அருகிலிருந்த நபர்கள் உடனடியாக வந்து அவர்களை ரயிலிலிருந்து ஓரமாக இழுத்துக் காப்பாற்றுகிறார்கள். இது தொடர்பான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல பயனர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துக்களில் சில கருத்துக்களைப் பார்க்கலாம். இதில் முதல் பயனர் ஒருவர் “அந்த பெரியவர் வரப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைத்து , அந்த இளைஞனை அபாயத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். இரண்டாவது பயனர் “நல்லவேளை இருவருக்கும் எதுவும் ஆகவில்லை, அந்த முதியவர் அவரை மட்டுமில்லாமல் அந்த இளைஞனையும் கொன்றிருப்பார் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தியாகி பரவி வருகிறது.

73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?...
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH...
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?...
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?...
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?...
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?...
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு...
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...