Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி

Craftsmanship Beyond Imagination : சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் பயன்படாத பழைய பொருட்களைக் கொண்டு தனது வீட்டுக்கு படிக்கட்டுகளை உருவாக்கியிருக்கறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இதுதான் வெற்றியின் படிகட்டா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி
புதுமையான படிக்கட்டு
karthikeyan-s
Karthikeyan S | Published: 15 May 2025 23:18 PM

சமீப காலமாக  வித்தியாசமான மற்றும் புதுமையான விடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் (Social Media)அடிக்கடி வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்கள் மக்களின் திறனை வெளிகாட்ட ஒரு மேடையாக இருந்து வருகிறது. இளைஞர்களின் வித்தியாசமான முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் மக்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், மர வேலைகள் செய்யும் இளைஞர் ஒருவர் தனது திறனைக் காட்டும் ஒரு வீடியோ (Video) தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பார்ப்பவர்களிடையே ஒரே நேரத்தில் வியப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இதனை வெற்றியை நோக்கி செல்லும் வித்தியாசமான படிக்கட்டுகள் என புகழ்ந்து வருகின்றனர்.

பழைய பொருட்களை வைத்து கட்டப்பட்ட படிக்கட்டுகள்

பழைய கட்டட பொருட்கள் மற்றும் பயன்படாத பொருட்களை வைத்து கட்டப்பட்ட இந்த வித்தியாசமான காண்பவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  காரணம் தூண்கள் போன்ற எந்தவிதமான தாங்கும் அமைப்பும் இல்லாமல் படிக்கட்டுகள் நின்று கொண்டிருக்கிறது என்பதே அனைவரின் ஆச்சரியத்துக்கும் காரணம். மேலும் அவை செங்குத்தாக ஏறுவதற்கே சிரமமானதாக காட்சியளிக்கிறது.

இதுதான் வெற்றியின் படிக்கட்டா?

 

வீடியோவில், ஒரு கட்டடத்தின் முதல் மாடிக்கு செல்லவேண்டிய இடத்தில் நிறுவப்பட்டுள்ள, மிகவும் வித்தியாசமான மற்றும் சுழலும் வடிவிலான ஒரு படிக்கட்டுகள் காட்டப்படுகிறது. அவை வழக்கமான படிக்கட்டுகள் போல சாய்வாக இல்லாமல் செங்குத்தாக இருக்கின்றன. பார்ப்பதற்கு, யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியே மனத்தில் எழுகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் அந்த படிக்கட்டுகள் மீது ஏறி காட்டுகிறார். இவை பழைய கட்டிடப்பொருட்களை வைத்து அந்த இளைஞர் உருவாக்கியிருக்கிறார். இதனை  நெட்டிஷன்கள் வெற்றியின் படிக்கட்டு என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவை ‘cookieeforu’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது. இது தற்போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துவிட்டது. பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒருவர் இந்த கண்டுபிடிப்பை யார் உருவாக்கினார்கள்?  அவரை நான் பார்த்தாக வேண்டும் என்று வியப்புடன் கேட்டுள்ளார். மற்றொருவர், “இதுதான் வெற்றியை நோக்கி செல்லும் படிக்கட்டு” என்று கமென்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோ எவ்வளவு நகைச்சுவையாக பார்க்கப்பட்டாலும், இதனுடைய பாதுகாப்பு மற்றும் நடைமுறை பயன்கள் குறித்து கேள்விகள் எழுகிறது. ஆனால் அதே நேரம் இதனை உருவாக்கியவரின் கைவினைத்திறனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும், சில மனிதர்களின் கண்டுபிடிப்புகள் மற்றவர்களை மெய்சிலிர்க்க செய்யும். இந்த படிக்கட்டுகள் அதற்கு ஒரு அழகான உதாரணம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?
எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?...
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!...
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!...
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி...
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?...
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு...
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?...
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!...
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!...