Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : Sky Diving செய்த சிங்கம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ உண்மையா?.. குழம்பும் நெட்டிசன்கள்!

A video of lion skydiving goes viral on internet | இணையத்தில் ஒவ்வொரு நாளும் சில வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சிங்கம் ஒன்று ஸ்கை டைவிங் செய்வதை போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதா என விவாதம் எழுந்துள்ளது.

Viral Video : Sky Diving செய்த சிங்கம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ உண்மையா?.. குழம்பும் நெட்டிசன்கள்!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 15 May 2025 19:05 PM

ஸ்கை டைவிங் (Sky Diving) என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு விளையாட்டாக உள்ளது. அந்த விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யத்தையும், அனுபவத்தையும் கொடுக்குமோ அதே அளவுக்கு அதில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கலும் உள்ளது. இதனால் பெரும்பாலான நபர்கள் இந்த விளையாட்டை விளையாடுவதில்லை. ஆனால், சிலர் வாழ்க்கையில் ஒருமுறையாவது இத்தகைய செயல்களை செய்ய வேண்டும் என துணிந்து ஸ்கை டைவிங் செய்கின்றனர். அந்த வகையில் முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கை கால்கள் வேலை செய்யாதவர்கள் என பலரும் துணிந்து, அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக ஸ்கை டைவிங் செய்கின்றனர்.

இத்தகைய வித்தியாசமான ஸ்கை டைவிங் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது சிங்கம் ஒன்று ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை பார்க்கும் இணைய வாசிகள் அது உண்மையா, பொய்யா என தெரியாமல் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன, அது உண்மையா, பொய்யா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்கை டைவிங் செய்த சிங்கம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உண்மையா?

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிங்கம் ஒன்று ஸ்கை டைவிங் செய்கிறது. ஸ்கை டைவிங் செய்யும்போது எப்போதும் ஒரு பாதுகாவலர் உடன் இருக்க வேண்டும் என்ற நிலையில், சிங்கத்தை பிடித்தபடி இருவரும் ஸ்கை டைவிங் செய்கின்றனர். அந்த சிங்கமோ எந்த வித எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக ஸ்கை டைவிங் செய்கிறது. இவை அனைத்தும் இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தங்களது ஆசைக்காகவும், விருப்பத்திற்காகவும் சிலர் இத்தகைய மோசமான செயல்களை செய்து வருகின்றனர் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். காட்டுக்கு ராஜா தற்போது வானத்திற்கு ராஜாவாக மாறிவிட்டது என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வீடியோ உண்மையானதா அல்லது பொய்யானதா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் அதிகம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த வீடியோ ஏஜ என கூறி வருகின்றனர்.