Credit Card : கிரெடிட் கார்டில் செய்யவே கூடாத தவறுகள்.. நிதி இழப்பை ஏற்படுத்தலாம்!
Avoid These Credit Card Mistakes to get full benefits | இந்தியாவில் உள்ள பல வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் பயனர்கள் பல தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், கிரெடிட் கார்டுகளை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகளை (Credit Card) வழங்கி வருகிறது. இந்த கிரெடிட் கார்டுகள் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. காரணம், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. பிறகு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்த தொகையை மாத தவணையாக (Monthly Installment) திருப்பி செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் தேவையான நேரங்களில் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியும். இதனால் ஏராளமான பொதுமக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டுகள் என்னதான் பயனுள்ளவையாக இருந்தாலும் அதனை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது செய்யவே கூடாத தவறுகள் – கட்டாயம் தெரிந்துக்கொள்ளங்கள்
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது செய்யும் ஒரு சில தவறுகள் காரணமாக அதிக நிதி இழப்பை ஏற்படும் அபாயம் உள்ளது.
குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்துவது
பல கிரெடிட் பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டு பில்லில் குறைந்தபட்ச தொகையையே திருப்பி செலுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது பயனர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதாவது, கிரெடிட் கார்டு பில்லில் குறைந்தபட்ச தொகை செலுத்துவது மீதம் உள்ள தொகைக்கு மாதம் மாதம் வட்டி வழங்கப்படும். இதன் பெரிய அளவிலான தொகையை பயனர்கள் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
கிரெடிட் கார்டில் பணம் எடுப்பது
சிலர் ஏடிஎம்-ல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்த நாள் முதல் பணத்தை திருப்பி செலுத்தும் நாள் வரை மாதம் மாதம் இந்த வட்டி தொகை கணக்கிடப்படும்.
கடன் வரம்பை மீறி பயன்படுத்துவது
கிரெடிட் கார்டின் வரம்பை மீறி பயன்படுத்துவது சில சிக்கல்களை ஏற்படுத்தும். அதாவது கார்டை முழுவதுமாக பயன்படுத்துவது கிரெடிட் ஸ்கோரை குறைத்துவிடும். இதில் கிரெடிட் கார்டின் பயன்பாட்டை குறைக்க வழிவகை செய்துவிடும். எனவே கடன் கிரெடிட் கார்டின் பலன்களை முழுமையாக பெற வேண்டும் என்றால், கிரெடிட் கார்டு வரம்பின் 30 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதுதான் கிரெடிட் கார்டை சிறப்பாக பயன்படுத்த உதவும்.
கிரெடிட் கார்டு பயனர்கள் மேற்குறிப்பிட்ட இந்த விதிகளின் அடிப்படையில் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித சலுகைகளும் குறையாமல் முழுமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.