Banana Health Benefits : தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
Banana Health Benefits : வாழைப்பழம் என்பது எளிதாகக் கிடைக்க கூடிய ஒன்று. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, விட்டமின் பி6, சி, மற்றும் ஆண்ட்டிஆக்ஸிடன்கள் உள்ளிட்ட முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கலைத் தடுக்கிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கின்றன.

வாழைப்பழம் (Banana) என்பது நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாகும். இது எல்லா காலகட்டத்திலும் கிடைக்கும். தமிழில் மா, பலா, வாழை என முக்கனிகளை சொல்வர். அந்த அளவுக்கு அதில் இனிமையும் உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய சத்துக்களும் நிறைந்துள்ளன. வாழைப்பழம், நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடியது. மற்ற பழ வகைகளைக் காட்டிலும் விலை மலிவாக கிடைக்கக் கூடியது. இதில் கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates), குளுக்கோஸ், மற்றும் நார்சத்து அதிகமாக உள்ளதால் உடலுக்கு பல வழிகளில் நன்மை வழங்குகிறது. இது உடனடி சக்தியை வழங்குவதால், காய்கறி சாப்பிடாத பிள்ளைகளுக்கு கூட இது மிகச் சிறந்த விருப்பம்.
பல மருத்துவ ஆராய்ச்சிகள் வாழைப்பழத்தின் நன்மைகளை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, வேர்ல்டு ஹெல்த் ஆர்கனைசேஷன் (WHO) மற்றும் Indian Council of Medical Research போன்றவை வாழைப்பழம் இருதயநலம், வயிற்று நலம், மனநலம், மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கூறுகின்றன.
செரிமானத்திற்கு சிறந்தது
வாழைப்பழத்தில் உள்ள நார் சத்து செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது. வாழைப்பழம் ஒரு நேசரல் லேக்சடிவ் (Natural Laxative) ஆக செயல்படுகிறது. இதனால் வயிறு சம்மந்தப்பட்ட பெரும்பான்மையான பிரச்னைகளை சரி செய்யக் கூடியது.
எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் தசைகளின் செயல்திறனை மேம்படுத்தும் தன்மை கொண்டது. இதனால், விளையாட்டு வீரர்கள் கூட இதனை அடிக்கடி உணவில் சேர்க்கின்றனர்.
மனநலனுக்கு நல்லது
வாழைப்பழம், குறிப்பாக, ட்ரிப்டோபேன் என்ற அமினோ அமிலத்தை கொண்டது. இது நம் மனநலத்தை மேம்படுத்தும் செரடோனின் ஹார்மோனை தூண்டும். இதனால் மன அழுத்தம் குறையும், மனச்சோர்வு நீங்கும்.
சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கு உதவும்
அண்ட்டிஆக்சிடன்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை வாழைப்பழத்தில் அதிகம் உள்ளதால், சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது. முடி வலிமை பெறவும், உதிர்தலை தடுக்கவும் இது நன்மை செய்கிறது.
எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
-
காலை உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது மிகச்சிறந்தது.
-
வெறும் வயிற்றில் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கவும், சிலருக்கு அது அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
-
இரவு நேரங்களில் குறைவாகவே உட்கொள்ள வேண்டாம், இது சிலருக்கு வாயு பிரச்சனை ஏற்படுத்தலாம்.
வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்?
-
வாழைப்பழங்களை நேரடியாக சாப்பிடுவதில் சிக்கல் இருந்தால் ஜூஸ் போட்டு சாப்பிடலாம்
-
ஆப்பிள், டேட்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம்.
-
வாழைப்பழ கேக், வாழைப்பழ குல்ஃபி, போன்ற பல இனிப்புகள், ரெசிப்பிகளிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
பல மருத்துவ ஆராய்ச்சிகள் வாழைப்பழத்தின் நன்மைகளை
தினசரி வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?
-
உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கும்.
-
பசியை கட்டுப்படுத்தும்.
-
எலும்புகளை வலுப்படுத்தும்.
-
மனநலத்தை மேம்படுத்தும்.
-
மலச்சிக்கலை தடுக்கும்.
-
சருமம் மற்றும் முடி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
வாழைப்பழம் என்பது எளிய உணவாக இருந்தாலும், அதில் அடங்கியுள்ள நன்மைகள் அதிகம். இன்று முதலே உங்கள் தினசரி உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்வதால் உங்கள் வழமான வாழ்க்கைக்கு அது பெரிதும் கைகொடுக்கும்.