Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : மழையில் நனைந்த பாதுகாவலர்.. அடுத்த நொடியே யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல்.. வைரல் வீடியோ!

Elephants Shield Care Tacker from Rain | இணையத்தில் ஒவ்வொரு நாளும் யானைகள் தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். காரணம், யானைகள் மிகுந்த பாசம் கொண்ட உயிரினமாக உள்ளதால் அவை செய்யும் சில சில செயல்களின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அத்தகைய அழகான வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

Viral Video : மழையில் நனைந்த பாதுகாவலர்.. அடுத்த நொடியே யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 13 May 2025 18:31 PM

பூமியில் வாழும் பெரிய வகை உயிரினங்களில் ஒன்று யானை. யானை பார்ப்பதற்கு பெரிய தோற்றம் கொண்டு இருந்தாலும் அவை குணத்தில் குழந்தைகளை போல. யானைகள் அதிகம் பாசம் கொண்ட உயிரினங்களாக உள்ளன. தங்களது இனத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது தங்களது பாதுவாலர்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ அவை துடித்து போய்விடும். யானைகள் அதிக உணர்திறன் கொண்ட உயிரினங்கள் என்பதால் அவை மிக எளிதாக மனிதர்களுடன் ஒன்றிணைந்து விடுகின்றன. இந்த நிலையில், தங்களது பாதுகாவலரை மழையில் இருந்து பாதுகாக்க இரண்டு யானைகள் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

பாதுகாவலரை மழையில் இருந்து பாதுகாக்க குடையாக மாறிய யானைகள்

இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண், நாங்கள் திறந்த வெளியில் இருந்தபோது திடீரென இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது சபா மற்றும் தோங் என்னை நெருங்கி வந்தன. அவை, தங்களது உடல்களை வைத்து என்னை மழையில் இருந்து பாதுகாத்தன. அப்போது நான் மழையில் நனையாமல் இருப்பதற்காக ரெயின் கோட் அணிந்தேன். உடனே சபா நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை தனது தும்பிக்கையை வைத்து சோதனை செய்து எனக்கு முத்தமிட்டது. அது, எதற்கும் பயப்படாதே, எல்லாம் சரியாகிவிடும் என்பது போல இருந்தது என்று அந்த யானைகளின் பாதுகாவலர் மிகவும் நெகிழ்ச்சியாக நடந்தவற்றை பதிவு செய்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Lek Chailert (@lek_chailert)

வைரல் வீடியோவுக்கு கருத்து பகிர்ந்து வரும் நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மிகவும் தூய்மையான மற்றும் உண்மையான அன்பை இந்த பெண் பெறுகிறார் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு யானைகளின் செயல்களை பார்த்து வியந்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

யானைகள் மிகவும் அன்பான உயிரினம். அவை யாரையேனும் அதிகமாக நேசித்து அவர்களை நம்பும் பட்சத்தில் அந்த நபருக்காக அவை எதை வேண்டுமானாலும் செய்யும் இயல்பை கொண்டவை. அவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த இரண்டு யானைகளின் செயல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்
விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்...
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?...
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!...
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?...
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!...
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...