Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Attended Benz Movie Pooja : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் , இயக்குநராகவும் இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவரின் நடிப்பில் புதியதாக உருவாகிவரும் படம் பென்ஸ். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான பூஜைகள் சமீபத்தில் நடந்த நிலையில், அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan : ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!
பென்ஸ் படக்குழுவுடன் சிவகார்த்திகேயன்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 13 May 2025 20:53 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) எழுத்திலும், தயாரிப்பிலும் உருவாக்கவுள்ள படம் பென்ஸ் (Benz). இந்த திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜின் எழுதி உருவாக்கவுள்ள இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்  (Bakkiyaraj Kannan) இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ரெமோ மற்றும் சுல்தான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கவுள்ள திரைப்படம் பென்ஸ். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ஆர். மாதவன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டிலே வெளியான நிலையில், 2025, மே மாதத்தில்தான் இந்த படத்தின் பூஜைகள் நடந்துள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கின்ற நிலையில், பிரம்மாண்ட படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை கடந்த 2025, மே 11ம் தேதியில் சிறப்பாக நடந்துள்ளது.

இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட புகைப்படத்தைப் படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.

பென்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த பென்ஸ் படப் பூஜையில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மதராஸி மற்றும் பராசக்தி என இருபடங்களும் உருவாகி வருகிறது. இதில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதராஸி. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 05ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பராசக்தி. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்
விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்...
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?...
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!...
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?...
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!...
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...