India vs England Test Series 2025: ரோஹித், கோலிக்கு மாற்று வீரர்கள் யார்? இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி இதுதானாம்..!
India's Predicted Test Squad vs England: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதை அடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சாய் சுதர்சன், கருண் நாயர் போன்ற வீரர்கள் வாய்ப்பு பெறலாம். கேப்டனாக சுப்மன் கில் அல்லது கே.எல். ராகுல் தேர்வு செய்யப்படலாம். முகமது ஷமியின் இடம் இன்னும் உறுதியாகவில்லை. இந்திய அணியின் கணிக்கப்பட்ட அணி மற்றும் போட்டி அட்டவணை இந்த கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) என்ற 2 சிறந்த டெஸ்ட் வீரர்கள் இல்லாமல் விளையாட போகிறது. ஐபிஎல் 2025 சீசனின்போதே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தனர். ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில்லை அணியின் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளதாகவும், அதேநேரத்தில், கே.எல்.ராகுலை சிலர் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்படி இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ரோஹித், கோலிக்கு மாற்ற வீரர் யார்..?
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்யும் பணியின் பிசிசிஐயும், தேர்வுக்குழுவும் ஆராய்ந்து வருகிறது. அதன்படி, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்சனை களமிறக்கலாம் என்றும், விராட் கோலிக்கு மாற்றாக கருண் நாயரின் பெயரையும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஒருவேளை சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு துணையாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம். இதற்குபிறகு, சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் முறையே 3 வது மற்றும் 4வது இடத்திலும் ரிஷப் பந்த் 5வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 6வது இடத்திலும், ஷர்துல் தாக்கூர் 7வது இடத்திலும் களமிறங்கலாம்.
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா..?
காயத்திலிருந்து மீண்டதிலிருந்து முகமது ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், அவரது ஃபார்ம் குறித்து பிசிசிஐ கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம் பெறுவது உறுதியாகத் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுபவத்தை கருத்தில்கொண்டு முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் வேகத்தில் இங்கிலாந்து அணிக்கு தொல்லை கொடுக்கலாம். அதேநேரத்தில், ஜஸ்பிரித் பும்ரா தொடரின் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கணிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ரெட்டி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை:
- முதல் டெஸ்ட்: ஜூன் 20–24, 2025, ஹெடிங்லி, லீட்ஸ்
- 2வது டெஸ்ட்: ஜூலை 2–6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
- 3வது டெஸ்ட்: ஜூலை 10–14, 2025, லார்ட்ஸ், லண்டன்
- 4வது டெஸ்ட்: ஜூலை 23–27, 2025, ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
- 5வது டெஸ்ட்: ஜூலை 31–ஆகஸ்ட் 4, 2025, தி ஓவல், லண்டன்