IPL 2025 Restart: மாற்றப்பட்ட அட்டவணை.. மாற்றப்பட்ட இறுதிப்போட்டி.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!
IPL 2025 Revised Schedule: இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025, மே 17, 2025 அன்று மீண்டும் தொடங்குகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய அட்டவணையில் 13 லீக் போட்டிகள், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி தேதிகள் இடம் பெற்றுள்ளன. 6 ஸ்டேடியங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி ஜூன் 3 அன்று நடைபெறும்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான (India Pakistan Tensions) சண்டை காரணமாக சிறப்பாக நடது கொண்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசனானது வருகின்ற 2025 மே 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை பிசிசிஐ (BCCI) நேற்று அதாவது 2025 மே 12ம் தேதி வெளியிட்டது. அதன்படி, 13 லீக் ஸ்டேஜ் போட்டிகளுக்கான தேதிகள், இடங்கள், பிளே ஆஃப்கள் மற்றும் இறுதிப்போட்டிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, , ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனானது இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் நடைபெற்றது. தற்போது மீதமுள்ள 13 லீக் போட்டிகள் 6 ஸ்டேடியங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டி எப்போது..?
வருகின்ற 2025 மே 17ம் தேதி முதல் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பெங்களுரூவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் 2025 பிளேஆஃப் போட்டிகள் எப்போது..?
ஐபிஎல் 2025ன் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வருகின்ற 2025 மே 27ம் தேதியுடன் மோதுகின்றது. அதேநேரத்தில், முதல் தகுதிச் சுற்றுப் போட்டி வருகின்ற 2025 மே 29ம் தேதியும், எலிமினேட்டர் போட்டி வருகின்ற 2025 மே 30ம் தேதியும் நடைபெறுகிறது. அதேநேரத்தில்,, இரண்டாவது தகுதிச் சுற்று வருகின்ற 2025 ஜூன் 1ம் தேதியும், ஐபிஎல் இறுதிப் போட்டி வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதியும் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?
ஐபிஎல் 2025 அட்டவணையின்படி, இறுதிப்போட்டியானது வருகின்ற 2025 மே 25ம் தேதியுடன் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. புதிய அட்டவணையின்படி, இறுதிப்போட்டியானது வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி நடைபெறும் என்றும் அதேநேரத்தில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட புதிய அட்டவணை:
மே 17: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூரு)
மே 18: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)
மே 18: டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் (டெல்லி)
மே 19: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (லக்னோ)
மே 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)
மே 21: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (மும்பை)
மே 22: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (அகமதாபாத்)
மே 23: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பெங்களூரு)
மே 24: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (ஜெய்ப்பூர்)
மே 25: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (அகமதாபாத்)
மே 25: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)
மே 26: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)
மே 27: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (லக்னோ)
ஐபிஎல் 2025 பிளேஆஃப்கள் போட்டி அட்டவணை
மே 29: தகுதிச் சுற்று 1 (இடம் முடிவு செய்யப்படவில்லை)
மே 30: எலிமினேட்டர் (இடம் முடிவு செய்யப்படவில்லை)
ஜூன் 1: தகுதிச் சுற்று 2 (இடம் முடிவு செய்யப்படவில்லை)
ஜூன் 3: இறுதி (இடம் முடிவு செய்யப்படவில்லை)