Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli Test Captaincy Records: தொடர்ந்து நம்பர் ஒன்! அதிக வெற்றி.. அதிக சதம்.. டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி படைத்த சாதனைகள்!

Virat Kohli's Test Retirement: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது கேப்டன்ஷிப் காலகட்டத்தின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. 40 டெஸ்ட் வெற்றிகள், சொந்த மண்ணில் அனைத்து டெஸ்ட் தொடர் வெற்றிகள், மற்றும் கேப்டனாக 20 சதங்கள் என அவரது சிறப்பான சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், ரோஹித் சர்மா மற்றும் தோனியுடனான ஒப்பீடு மூலம் விராட் கோலியின் வெற்றிகரமான கேப்டன்ஷிப் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

Virat Kohli Test Captaincy Records: தொடர்ந்து நம்பர் ஒன்! அதிக வெற்றி.. அதிக சதம்.. டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி படைத்த சாதனைகள்!
விராட் கோலி சாதனைகள்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 May 2025 14:50 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இப்போது, விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தியுள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என இரண்டு தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களும் 2024 டி20 உலகக் கோப்பை (2024 T20 World Cup) வெற்றிக்கு பிறகு, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து, தற்போது இவர்கள் ஆட்டத்தை இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே காண முடியும். இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி படைத்த சாதனைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

டெஸ்ட் கேப்டன்:

கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது விராட் கோலி இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அன்று முதல் கடந்த 2022ம் ஆண்டு வரை டெச்ட் போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக வலம் வந்தார். கடந்த 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதற்கு முன்னதாகவே, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். விராட் கோலி தலைமையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக நாட்கள் நம்பர் ஒன் அணியாக இருந்த அணி என்ற சாதனையையும், வெளிநாட்டு மண்ணில் பல சாதனைகளையும் இந்தியா படைத்தது.

வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்:

இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் வரலாற்றை எடுத்துகொண்டால் விராட் கோலி மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி 40 போட்டிகளில் வெற்றியையும், 17 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேநேரத்தில், 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இது முன்னாள் கேப்டன்களான சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை விட அதிகம்.

மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில் 27 போட்டிகளிலும், ரோஹித் சர்மா தலைமையில் 24 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 12 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

கேப்டனாக விராட் கோலி பேட்டிங் சாதனை:

ஒரு கேப்டனாக விராட் கோலி பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். கேப்டனாக விராட் கோலி இதுவரை 113 இன்னிங்ஸ்களில் 54.80 சராசரியில் 20 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் 5,864 ரன்கள் எடுத்தார். ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தது கேப்டனாக அவரது சிறந்த இன்னிங்ஸ் ஆகும். டெஸ்ட் கேப்டனாக இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர்தான். அவருக்குப் பிறகு எம்.எஸ். தோனி வருகிறார். தோனி 60 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 96 இன்னிங்ஸ்களில் 40.63 சராசரியாக 3454 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 24 அரை சதங்களும் அடங்கும்.

ஒரு கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள்:

ஒரு கேப்டனாக இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் கோலி ஆவார். இந்திய அணியில் அதிகபட்சமாக, கோலி கேப்டனாக 20 சதங்களை அடித்துள்ளார். அவருக்குப் பிறகு இந்திய கேப்டன்களில் சுனில் கவாஸ்கர் 11 சதங்கள் அடித்துள்ளார். அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக ஒரு கேப்டனாக அதிக சதங்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதிக தொடர் வெற்றி:

2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் விராட் கோலி முதல் முறையாக கேப்டனாக இருந்தார். இந்தியா 4 டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இதன் பிறகு, கோலியின் தலைமையின் கீழ், இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்றது. அதாவது, சொந்த மண்ணில் நடந்த 11 தொடர்களையும் கோலி வென்றார். தோனி மற்றும் ரோஹித் இருவரின் தலைமையின் கீழ், இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது.

விஜய் சேதுபதியின் 'டிரெயின்' கிளைமேக்ஸை மேடையில் உடைத்த மிஷ்கின்!
விஜய் சேதுபதியின் 'டிரெயின்' கிளைமேக்ஸை மேடையில் உடைத்த மிஷ்கின்!...
பஹல்காம் தாக்குதல் டூ போர் நிறுத்தம்.. பிரதமர் மோடி இன்று உரை!
பஹல்காம் தாக்குதல் டூ போர் நிறுத்தம்.. பிரதமர் மோடி இன்று உரை!...
ரஜினியுடன் படம் பண்ணக் காரணமே விஜய் அண்ணாதான் - லோகேஷ் கனகராஜ்!
ரஜினியுடன் படம் பண்ணக் காரணமே விஜய் அண்ணாதான் - லோகேஷ் கனகராஜ்!...
சிவ தாண்டவம் இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம்!
சிவ தாண்டவம் இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம்!...
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்ததால் சண்டை - இந்திய இராணுவம்
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்ததால் சண்டை - இந்திய இராணுவம்...
அந்த சிக்கலான நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் உதவினார்...
அந்த சிக்கலான நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் உதவினார்......
உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!
உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!...
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்...
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்...
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!...
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...