Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!

Stay Cool, Burn Fat : கோடைகாலத்தில் உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் சவாலான ஒன்று. வெப்பம் காரணமாக ஏற்படும் வியர்வையினால் நம் உடல் விரைவில் சோர்வடைந்துவிடும். இந்த நிலையில் நமது உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் எப்படி உடல் எடையைக் குறைக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 May 2025 23:34 PM

பலருக்கும் தங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் கோடைகாலத்தில் அது மிகவும் சவாலனதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள முடியாது.  இந்த நேரத்தில் நாம் உண்ணும் உணவும், குடிக்கும் தண்ணீரும் நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, நம் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. சிலபழச்சாறுகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றை தினமும் குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மன அழுத்தமும் குறையும். உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கோடைகாலத்தில் எடை குறைப்புக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்

  • எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன. இவை நம் உடலில் தாக்தத்தை ஏற்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும். கூடுதலாக, உடலுக்கு நீர்ச்சத்தும் கிடைக்கிறது. வெள்ளரி இலைகள், புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து குடிப்பது கோடை வெப்பத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடலை நீர்ச்சத்து குறையாமலும் வைத்திருக்கும். இவை ஒரே நேரத்தில் எடை இழப்புக்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.
  • ஆப்பிள் வினிகரை தினமும் ஒரு முறை தண்ணீரில் கலந்து குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது பசியைக் குறைத்து அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதனால் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. இதன் மூலம் எடை இழப்பது எளிதாகிறது.
  • கிரீன் டீயில் கேட்டசின்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து ஆரோக்கியத்தை காக்க உதவுகின்றன. கோடையில் காலையிலும் மாலையிலும் கிரீன் டீ குடிப்பது எடை இழப்புக்கு மிகவும் நல்லது. இது நம் உடலுக்கு ஆற்றலையும் தருகிறது.
  • சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவற்றை எலுமிச்சை சாறுடன் தண்ணீரில் கலந்து குடித்தால், உங்கள் வளர்த்சிதை மாற்றம் மேம்படும். கொழுப்பு கரைந்து உடல் இலகுவாகும். கூடுதலாக, குடல் பகுதியும் சரியாக செயல்பட இது உதவுகின்றன.
  • தர்பூசணியில் கலோரிகள் மிகக் குறைவு, நீர்ச்சத்து அதிகம். இதன் ஜூஸை குடிப்பதால் நம் உடல் நீர்ச்சத்தால் நிறைந்திருக்கும். வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரும். எனவே குறைவான உணவையே நாம் எடுத்துக்கொள்வோம். இதனால் எடை இழப்பது எளிதாகிறது.
  • கற்றாழை சாறு நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கொழுப்பின் அளவைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த சாறு சருமத்திற்கும் மிகவும் நல்லது.
  • இளநீரில் கலோரிகள் குறைவாகவும், எலக்ட்ரோலைட்டுகள் அதிகமாகவும் உள்ளன. இது முழு நீரால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கோடையில் இதைக் குடிப்பதால் உடல் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கோடை காலத்தில் இந்த இயற்கை பானங்களை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.