IPL 2025 Resumes: ஐபிஎல்லில் அமலாகும் புதிய விதி.. மாற்று வெளிநாட்டு வீரர்களுக்கு லக்கா..? லாக்கா..?
IPL 2025 Player Availability: இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஒரு வாரம் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025, மே 17ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. சர்வதேச போட்டிகள் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் போகலாம். புதிய விதிப்படி, இடைநிறுத்தத்திற்குப் பின் சேர்ந்த மாற்று வீரர்களை அடுத்த சீசனில் அணிகள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. இருப்பினும், ஒத்திவைப்புக்கு முன் சேர்ந்தவர்களை தக்க வைக்கலாம். பல முக்கிய வீரர்களின் வருகை சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை (India Pakistan Tensions) காரணமாக சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்த ஐபிஎல் 2025 ஒரு வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது இரு நாடுகளுக்கும் இடையே சண்டை ஒப்பந்தத்தின் இடையில் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், வருகின்ற 2025 மே 17ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் 2025 தொடங்கவுள்ளது. முன்னதாக, ஐபிஎல் 2025 (IPL 2025) ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டபோது, பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். அதேநேரத்தில், 2025 மே 27ம் தேதி ஐபிஎல் 2025 சீசனில் இறுதிப்போட்டி இருந்தநிலையில், தற்போது 2025 ஜூன் 3ம் தேதியாக மாற்றப்பட்டது. இந்த அட்டவணை மாற்றத்தின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அட்டவணையில் சில வெளிநாட்டு வீரர்கள் சிக்கி கொண்டனர். ஐபிஎல் 2025ல் பங்கேற்ற ஒரு சில வீரர்கள் வருவார்கள், ஒரு சிலர் வரமாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஐபிஎல் போட்டியில் சில புதிய விதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025ல் மாற்று விதி
ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கிய பிறகு பல வெளியாடு வீரர்கள் சர்வதேச போட்டிகள் காரணமாக விளையாட முடியாமல் போகலாம். மேலும், லீக் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடிவிட்டு, பிளேஆஃப்களில் விளையாட முடியாத சூழலும் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஐபிஎல் 2025 சீசனின் நடுவில் மாற்று வீரர்களாகக் கொண்டுவரப்படும் வீரர்களை அடுத்த சீசனில் அணி தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஐபிஎல் 2025 இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு பிசிசிஐ அங்கீகரித்த மாற்று வீரர்களை அடுத்த சீசனுக்கு தக்க வைத்துக் கொள்ளலாம். இதன் பொருள், இடைநீக்கத்திற்குப் பிறகு மாற்று வீரர்களாக வரும் வீரர்கள் அடுத்த சீசனில் ஏலத்தில் பங்கேற்று அணிக்களுக்காக விளையாட முடியும். உதாரணத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடம்பெற்றுள்ள பிரேவிஸ், ஐபிஎல் 2025 இடைநிறுத்தத்திற்கு முன்பே சிஎஸ்கே அணியில் இணைந்ததால், ஏலத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.
யார் திரும்பி வருவார்கள், யார் வரமாட்டார்கள்?
ஐபிஎல் 2025 போட்டிகள் வருகின்ற 2025 மே 17ம் தேதி மீண்டும் தொடங்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜோஸ் பட்லர் பிளேஆஃப் போட்டிகளைத் தவறவிடலாம். அதே நேரத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சக வீரர் ககிசோ ரபாடா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகக்கூடும். அதே நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைக் கருத்தில் கொண்டு ஜோஷ் ஹேசில்வுட்டின் இருப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளில் விளையாடலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
மார்கோ ஜான்சன், வில் ஜாக்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களும் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. மேலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஐடன் மார்க்ரம் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.