Ayush Mhatre: சூர்யகுமார் யாதவ் இதை சொன்னார்..! சிஎஸ்கேவில் இனி என் கிரிக்கெட் வாழ்க்கை.. மனம் திறந்த ஆயுஷ் மத்ரே!
Chennai Super Kings: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏமாற்றம் அளித்தாலும், இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அசத்தலான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். 181.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 163 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் அவரை சென்னை அணியில் சேர்க்க பரிந்துரைத்தது குறித்தும், அவரது அனுபவம் குறித்தும் ஆயுஷ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகவும், 5 முறை சாம்பியன் என்ற பெருமையுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியானது ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் களமிறங்கியது. இருப்பினும், இந்த சீசனானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றமாகவே அமைந்தது. ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை 12 போட்டுகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்று தகுதியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. சென்னை அணி முழுக்க முழுக்க அனுபவம் வாய்ந்த அணியாக இரு காலத்தில் இருந்த நிலையில், இப்போது ஆயுஷ் மத்ரே (Ayush Mhatre), பிரெவிஸ் போன்ற இளம் வீரர்களாக சூழ தொடங்கியது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தும், சூர்யகுமார் யாதவ் குறித்தும் ஆயுஷ் மத்ரே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆயுஷ் மத்ரே செயல்திறன்:
The name is Ayush Mhatre. 🦁
Youngest to score 5️⃣0️⃣ in Yellove🙌🏻#RCBvCSK #WhistlePodu 🦁💛— Chennai Super Kings (@ChennaiIPL) May 3, 2025
ஐபிஎல் 2025 சீசனின் நடுப்பகுதியில் சென்னை சூப்பர் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்து வெளியேறினார். எனவே, ருதுராஜூக்கு பதிலாக 17 வயதான ஆயுஷ் மத்ரே மாற்று வீரராக சென்னை அணியில் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஆயுஷ் மத்ரே 181.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 163 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2025 மே 3ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 94 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் குறித்து ஆயுஷ் மத்ரே கூறியதாவது..
I Am 99% Sure That AR Srikkanth Must Have Scouted Ayush Mhatre And Urvil Patel From The Domestic And Recommended Their Names To CSK. He May Have Also Recommended Dewald Brevis Name. If This Is True Then Big Thank You Srikkanth 💛. pic.twitter.com/8wYIcStRoP
— Aufridi Chumtya (@ShuhidAufridi) May 14, 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை அழைக்க விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் கூறியது குறித்து ஆயுஷ் மத்ரே மனம் திறந்தார். அதில், “சூர்யகுமார் யாதவ் என்னிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உங்களை தேடுகிறது, அவர்கள் உங்களை விரைவில் அழைப்பார்கள் என்று கூறினார். அது எனக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தந்தது. அந்த நொடிக்காக மனதளவில் தயாராக இருந்தேன். அதன்பிறகு, ஸ்ரீகாந்த் சார் என்னிடம் நீங்கள் இங்கே இரண்டு நாட்கள் வர வேண்டும் என்றும், நாங்கள் உங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எனவே, சென்னை அணியில் ஒரு பகுதியாக இருப்பதில் நாம் மிகவும் உற்சாகமாக இருந்தேன். என்னை சோதிக்கவும் செய்தார்கள்.” என்றார். தற்போது ஆயுஷ் மத்ரே பேசிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸின்அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.