Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பிராங்க் வீடியோவுக்காக இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!

Young Man Street Prank Gone Wrong : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில், ஒரு இளைஞர் தெருவில் செல்லும் பெண்ணிடம் மதுபானம் தெளிப்பது போல் பிராங்க் செய்கிறார். இதனால் கோபமடைந்த பெண், இளைஞரை கடுமையாக திட்டுகிறார். பலரும் இந்தச் செயலைக் கண்டித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இணையத்தில் பிராங்க் வீடியோக்கள் பதிவிடுவதன் ஆபத்துகளை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

Viral Video : பிராங்க் வீடியோவுக்காக இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Published: 16 May 2025 22:42 PM

சமூக வலைதளங்களின் வளர்ச்சி பெருகிய நிலையில், எல்லோரும் தனியாக  யூடியூப் சேனல் ( channel) வைத்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் செய்யும் விஷயமானது, பைத்தியக்காரத்தனமாக பல செயல்களைச் செய்கிறார்கள். அவர்களது யூடியூப் பக்கத்திற்கு வியூஸ் அதிகம் கிடைக்கவேண்டும் என்று மக்களுக்கு இடையூறு (Disturbance) செய்யும் விதத்தில் பல செயல்களைச் செய்து வருகின்றனர். அதைப்போல் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் இளைஞர் (young man) பிராங்க் (Prank)  செய்ய முயன்று, இளம் பெண்ணிடம் அசிங்கப்பட்ட வீசிடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது கையில் மதுபான கோப்பையுடன் இருக்கிறார்.

ஆனால் அந்த கோப்பையில் இருப்பது உண்மையான மது பானம் கிடையாது. அது சாதாரணமாக குளிர்பானம்.  இந்த வீடியோவில் அந்த இளைஞர் சாலையில் வரும் ஒரு பெண்ணிடம் , அவர் மீது மதுபானம் கொட்டுவது போல் ஆக்ஷ்ன் செய்கிறார். இதைப் பார்த்த அந்த பெண் உண்மையிலே அவர் மீது கொட்டவருகிறாரோ என்று எண்ணிப் பயந்து விடுகிறார். இதில் கடும் கோபமான அந்த இளம் பெண் இளைஞரைச் சரமாரியாகத் தனது வார்த்தையால் திட்டியுள்ளார்.

மேலும் அந்த இளைஞரும் இது வெறும் பிராங்க் வீடியோவிற்காக என்று கூறுகிறார். ஆனால் அந்த இளம் பெண்ணை சூழ்ந்த மற்ற பெண்களும் , பிராங்க் செய்த இளைஞனை தங்களின் வார்த்தையால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெரும் சிரிப்பொலியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by PrankBuzz (@prankbuzz)

 

இந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது தோழிகளுடன் சாலையில் நடந்து செல்கிறார். இளைஞர் ஒருவர் கையில் ஒரு கோப்பை மதுபானத்துடன், அந்த பெண்களை நிறுத்துகிறார். பின்னர் அந்த இளைஞர் தண்ணீர் கேட்கிறார், அவர் குடிக்கத் தண்ணீர் கேட்பதாக நினைத்து அந்த இளம் பெண், தனது பையில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவருக்குக் கொடுக்கிறார். ஆனால், இளைஞரின் ககையில் மதுபான கோப்பை இருப்பதைப் பார்த்து, அந்த பெண் அவனுக்குத் தண்ணீர் பாட்டில் கொடுக்க மறுக்கிறார்.

பின் அந்த இளைஞனும் அந்த மதுபானத்தினை அவர் மீது கொட்டுவதுபோல் நடிக்கிறார். இதனால் கோபமடைந்த பின்னும், அவரின் தோழிகளும் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக இந்த நீங்கள் பார்க்கமுடியும். மேலும் இந்த வீடியோவில் கீழ் இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வீடியோவின் கீழ் இணையவாசிகள் கருத்துக்கள் :

இந்த வீடியோவில் முதல் பயனர் ஒருவர் “அந்த இளைஞர் மற்றவர்களை பிராங்க் செய்ய நினைத்தார், ஆனால் அந்த பெண்கள் இவரை பிராங்க் செய்வதுபோல் கடுமையாக தாக்கியுள்ளார்கள்” என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இந்த இளைஞருக்கு இது தேவையா, சாதாரணமாகச் சாலையில் செல்லும் பெண்ணிடம் இவ்வாறு நடக்கலாமா?” என்று கூறியுள்ளார்.

திடீரென துரத்திய யானை - தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்!
திடீரென துரத்திய யானை - தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்!...
இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?
இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?...
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்..
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்.....
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்...
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!...
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...