10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரிகள்!
Twin Sisters Score Identical Marks in Coimbatore | தமிழகத்தில் இன்று (மே 16, 2025) 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கோயம்புத்தூரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்ணை பெற்று அசத்தியுள்ளனர். மாணவிகள் ஒரே மதிப்பெண்ணை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர், மே 16 : தமிழகத்தில் இன்று (மே 16, 2025) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (10th Board Exam Result) வெளியாகியுள்ள நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் தேர்விலும் ஒரே மதிப்பெண்களை பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். கோயம்புத்தூரை சேர்ந்த கவிதா, கனிதா என்ற இரண்டு மாணவிகளும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 474 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில், இரட்டை சகோதரிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்று வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகத்தில் இன்று (மே 16, 2025) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 2025, மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், மொத்தம் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை விடவும், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4.14 சதவீதம் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 2025 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 2.25 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வாழ்த்துகளோடு 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டோம்.
மாணவச் செல்வங்கள் தேர்வு முடிவுகளை
🔗 https://t.co/r7JJmFiTeA,
🔗 https://t.co/GdKMMXBpbh… pic.twitter.com/yakiFo48f9— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 16, 2025
இன்று (மே 16, 2025) வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் வியக்கவைக்கும் வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இருவர் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். சுந்தரராஜன் – பாரதி செல்வி தம்பதியின் இரட்டை குழந்தைகளான கவிதா மற்றும் கனிதா 10 ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கவிதா தமிழில் 95, ஆங்கிலத்தில் 98, அறிவியலில் 89, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதேபோல கனிதா தமிழியில் 96, ஆங்கிலத்தில் 97, அறிவியலில் 92, சமூல அறிவியலில் 95 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இரண்டு மாணவிகளும் கணித பாடத்தில் 94 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒன்றாக பிறந்த இரட்டை சகோதரிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஒரே மதிப்பெண்ணை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.