Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பலத்த காற்றுடன் மழை.. மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. ஒடிசாவில் அதிர்ச்சி!

odisha lightning strike : ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மின்னல் தாக்கல் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது.

பலத்த காற்றுடன் மழை.. மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. ஒடிசாவில் அதிர்ச்சி!
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலிImage Source: Pixabay
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 May 2025 08:01 AM

ஒடிசா, மே 17 :  ஒடிசாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் வெப்பம் தணிந்து மழை பெய்து வருகிறது. மே மாதத்தல் வட மாநிலங்களில் கூட அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த இரு தினங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழையின்போது மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

கோராபுட் மாவட்டத்தில் மூன்று பேரும், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், தேன்கனல் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்ததாக மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். கோராபுட் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பரிதிகுடா கிராமத்தில் 2025 மே 16ஆம் தேதியான நேற்று  மின்னல் தாக்கி மூன்று பெண்கள் மற்றும் ஒரு முதியர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர் தற்காலிக குடிசையில் மழைக்காக ஒதுங்கி இருந்தபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் கும்பர்குடா கிராமத்தைச் சேர்ந்த பிருதி மண்டிங்கா (60), அவரது பேத்தி கசா மண்டிங்கா (18), மற்றும் அம்பிகா காஷி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 65 வயதுடை முதியர் ஹிங்கு மண்டிங்க லட்சுமிபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜஜ்பூர் மாவட்டத்தில் தர்மசாலா பகுதியில் மின்னல் தாக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

பலியானவர்கள் ஜெனாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புருசாஹி கிராமத்தைச் சேர்ந்த தாரே ஹெம்ப்ரம் (15) மற்றும் துக்குலு சட்டார் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குச்சா பகுதியில், வீட்டின் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

ஒடிசாவில் அதிர்ச்சி

கஞ்சம் மாவட்டத்தில், கபிசூர்யநகர் தாலுகாவில் உள்ள பரிடா கிராமத்தில் மின்னல் தாக்கி ஓம் பிரகாஷ் பிரதான் என்ற 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். பெலகுந்தா பகுதியில் உள்ள மாம்பழம் பறிக்க சென்ற 23 வயது இளம்பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். தேன்கனலில் தாஷிபூர் தொகுதிக்கு உட்பட்ட குசுமுண்டியா கிராமத்தில் மின்னல் தாக்கி சுருஷி பிஷ்வால் (40) என்ற பெண் உயிரிழந்தார்.

மோகனா பகுதியில் டிராக்டரில் கற்களை இறக்கிக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோராபுட், கட்டாக், குர்தா, நயாகர், ஜாஜ்பூர், பாலசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களளில் 60 முதல் 70 கிமீ பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மழை நேரத்தில் மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் எனவும் மாவட் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.