Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிஞ்சு குழந்தை கழுத்தறுத்து கொலை.. தந்தை செய்த கொடூர செயல்.. அதிர்ச்சி காரணம்!

Hydrabad Infant Murder By Father : ஹைதராபாத்தில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில், குழந்தையின் கழுத்தை அறுத்து, தந்தை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்து குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசியிருக்கிறார்.

பிஞ்சு குழந்தை கழுத்தறுத்து கொலை.. தந்தை செய்த கொடூர செயல்.. அதிர்ச்சி காரணம்!
குழந்தையை கொன்று தந்தைImage Source: Pixabay
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 May 2025 07:24 AM

ஹைதராபாத், மே 17 : தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில்  பிறந்த  இரண்டு வாரங்களே ஆன  குழந்தையை (Hyderabad infant death) தந்தை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டாவதும் பெண் குழந்தை பிறத்ததால், ஆத்திரத்தில் பிஞ்சு குழந்தையின் கழுத்தை அறுத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  நேபாளத்தைச் சேர்ந்தவர் ஜகத். இவர் வேலைக்காக ஹைதரபாத்தில் தங்கி உள்ளார். இவர் ஒரு ஆண்டாக அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த அப்பகுதியில் ஒரு வாடகை வாட்டில் மனைவி மற்றும் இரு மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மனைவி தனது இரு குழந்தைகளுக்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

பிஞ்சு குழந்தை கழுத்தறுத்து கொலை

இதனை அடுத்து, சிறிது நேரம் கழித்து தனது இரண்டு குழந்தைகள் காணவில்லை என்பதை அறிந்தார். இதனை அடுத்து, அவர் தனது இரண்டாவது குழந்தைகள் காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையில், அந்த பெண், தனது கணவர் கொலை செய்திருக்கலாம் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், ஜகத்திடம் விசாரணையை மேற்கொண்டனர். முதலில் தனக்கு தெரியாத கூறினார். இருப்பினும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, சம்பவத்தன்று இரவு ஜகத், தனது பிஞ்சு குழந்தையை வெளியே கொண்டு சென்று,  கழுத்தை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு, குழந்தையின் உடலை டோலிச்சோவ்கியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார்.

தந்தை செய்த கொடூர செயல்

இரண்டாவதும் பெண் குழந்தை பிறத்ததால், ஆத்திரம் அடைந்த, குழந்தையை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், மனைவியுடன் அடிக்கடி தகராறில்  ஜகத் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.  இதனை அடுத்து, ஜகத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவரை அழைத்து சென்று, குழந்தை  உடலை போலீசார் மீட்டுள்ளனர்.   தந்தையே இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக, 2025 ஏப்ரல் மாதத்தில் ஹைதராபாத்தில் திருமணம் மீறிய உறவுக்காக தனது மூன்று குழந்தையை தாய் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷம் கலந்து சாப்பாட்டை தனது மூன்று குழந்தைகளுக்கு சாப்பிட வைத்துள்ளார். இதனை அடுத்து, மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக் - அரசு எடுத்த முக்கிய முடிவு!
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக் - அரசு எடுத்த முக்கிய முடிவு!...
இளம் இயக்குநருடன் இணையும் ரஜினி? - ரசிகர்கள் ஆச்சர்யம்!
இளம் இயக்குநருடன் இணையும் ரஜினி? - ரசிகர்கள் ஆச்சர்யம்!...
அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை - பிரதீப் ஜான்
அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை - பிரதீப் ஜான்...
10, 11ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
10, 11ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது?...
நாளை பாயும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்... சிறப்பம்சங்கள் என்னென்ன?
நாளை பாயும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்... சிறப்பம்சங்கள் என்னென்ன?...
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டிய சூரியை புகழ்ந்த வைரமுத்து!
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டிய சூரியை புகழ்ந்த வைரமுத்து!...
ரஜினி படத்தில் நடிக்க காரணம் இதுதான் - கார்த்திக் சுப்பராஜ்
ரஜினி படத்தில் நடிக்க காரணம் இதுதான் - கார்த்திக் சுப்பராஜ்...
முடி மாற்று சிகிச்சை செய்த பல் மருத்துவர் - இருவர் பலி!
முடி மாற்று சிகிச்சை செய்த பல் மருத்துவர் - இருவர் பலி!...
இன்று முதல் மீண்டும் ஐபிஎல்.. பெங்களூரு - கொல்கத்தா மோதல்!
இன்று முதல் மீண்டும் ஐபிஎல்.. பெங்களூரு - கொல்கத்தா மோதல்!...
பெற்றோர் திட்டியதால் மாடியில் இருந்து குதித்த சிறுமி - அதிர்ச்சி
பெற்றோர் திட்டியதால் மாடியில் இருந்து குதித்த சிறுமி - அதிர்ச்சி...