+1 தேர்வில் தோல்வி.. மன வேதனையில் விபரீத முடிவு எடுத்த மாணவி.. பெற்றோர் கதறல்!
Tiruppur Student Suicide : 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 16ஆம் தேதியான நேற்று வெளியானது. இந்த நிலையில், தேர்வில் தோல்வி அடைந்ததால், திருப்பூரைச் சேர்ந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வேதியில் பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெறாத மாணவி, இதுபோன்ற விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.

திருப்பூர், மே 17 : திருப்பூரில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை (11th Student Suicide) செய்து கொண்டார். தேர்வு முடிவுகளை பார்த்த மாணவி, வேதியில் பாடத்தில் தேர்ச்சி அடையாததால், மன வேதனையில் இருந்துள்ளார். இதனை அடுத்து, மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் இடுவாய் சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி அம்மு. இவர்கள் இருவரும் அப்பகுதியில்உ ள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு மகள் ஒருவர் உள்ளார். இவர், வேலூரில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில், 11ஆம் வகுப்பு தேர்வை எழுதினார். தேர்வு முடிந்த பிறகு, கோடை விடுமுறைக்கு அந்த மாணவி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.
தேர்வில் தோல்வி
இந்த நிலையில், 2025 மே 17ஆம் தேதியான நேற்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், தேர்ச்சி அடைவோம் என எதிர்பார்த்து இருந்த மாணவி, ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அதாவது, மாணவி வேதியில் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மாணவி அழுது கொண்டே இருந்திருக்கிறார்.
பெற்றோரும் மாணவிக்கு ஆறுதல் கூறினர். இதன்பிறகு, பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மாணவி காணவில்லை. இதனால், பெற்றோர் அங்குமிங்கும் தேடி அலைந்தார். இதற்கிடையில், அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் மாணவியின் செருப்பு கிடந்ததை பார்த்துள்ளனர்.
இதனால், பதறிய பெற்றோர், உடனே போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மாணவி தேடி உள்ளனர். மூன்று நேரமாக தேடியதில், மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால், பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.
11ஆம் வகுப்பு வகுப்பு கிணற்றில் குதித்து தற்கொலை
பின்னர், மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 11ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாததால், மன வேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கு தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)