Cinema Rewind : மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. எஸ்.ஜே.சூர்யா சொன்ன விஷயம்!
SJ Suryah : இயக்குநராகத் தமிழில் பிரபலமாகி, பின் தற்போது முன்னணி வில்லனாகக் கலக்கி வருபவர் எஸ்.ஜே சூர்யா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து அசத்தி வருகிறார். இனிக்கையில் இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் நடிகர் மோகன் லாலின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு ரோலில் நடித்துவந்தவர் எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah). அவ்வாறு தமிழ் சினிமாவில் நடித்துவந்த இவர், தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். இவர் சினிமாவில் பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்த படம் வாலி (Vaalee) . நடிகர் அஜித் குமாரின் (Ajith kumar) நடிப்பில் வெளியான இந்த படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் (Vijay) நடிப்பில் வெளியான குஷி (Kushi) சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கிலும் இந்த குஷி படத்தினை ரிமேக் செய்தார். தொடர் படங்களின் வெற்றியை அடுத்து அவரே படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். பின் இவரின் படங்கள் சில தோல்விகளைச் சந்தித்தது.
அதைத் தொடர்ந்து பிற நடிகர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். மேலும் இவர் தற்போது ஜெயிலர் 2, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் மட்டும் தமிழில் பல படங்கள் உருவாகிவருகிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் 2 படம் வெளியானது.
விக்ரமின் இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகிவருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பு பற்றி இவர் பேசிய விஷயம் குறித்து விவரமாகப் பார்க்கலாம்.
மோகன்லாலை பற்றி எஸ்.ஜே. சூர்யா பேசிய விஷயம் :
முன்னதாக பேசிய அந்த நேர்காணலில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா ,”ஒரு நடிகருக்குப் படத்தில் ஆங்கில் தெரியவேண்டும், கேமரா பொசிசன் எங்கு இருக்கிறது, எதுவரை கவராகும் என்று தெரிந்திருக்கவேண்டும். மேலும் படத்தில் எந்த மூடில் இருக்கவேண்டும் என்று தெரியவேண்டும் , படத்தை எடிட் பண்ணும்போது அடுத்து எந்த காட்சிகள் இருக்கும் என்று தெரியவேண்டும். இந்த விஷயமானது ஒரு இயக்குநருக்கு மட்டும்தான் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை, ஒரு நடிகருக்கும் இந்த மாதிரியான விஷயங்கள் தெளிவாகத் தெரிந்திருக்கவேண்டும்.
ஒரு நடிகருக்குள் இயக்குனரிடம் இருக்கும் எல்லா திறமையும் இருந்தால்தான் அவர் அருமையான நடிகராக இருக்கமுடியும். அதைப் போல இருந்தால்தான் ஒரு நடிகர் சூப்பர் ஸ்டாராக இருக்கமுடியும், அதைப் பலபேரும் செய்திருக்கிறார்கள். அந்த விதத்தில் நான் நடிகர் மோகன்லாலின் திறமையைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.
அவர் ஒரு கேமரா எங்கு இருக்கிறது என்று தெரியும், இந்த காட்சிக்குப் பின் அடுத்த காட்சியில் எவ்வாறு நடிக்கவேண்டும் என்று தெரியும் மேலும் ஒரு இயக்குநருக்கு எவ்வாறு எல்லாம் தெரியுமோ அதைப் போல நடிகர் மோகன்லாலுக்கு படத்தைப் பற்றி முழுமையாகத் தெரியும். எங்கு கேமரா இருந்தாலும் அவர் சரியான இடத்தில் , எல்லா கேமராவும் கவர் ஆகிற இடத்தில் தெளிவாக நிற்பார், இதை மோகன்லாலை விட யாராலும் செய்யமுடியாது என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.